தமிழ்மணி என்கின்ற பெயரில் மறைந்து கொண்டு பார்ப்பன வெறியோடு கொளுத்து திரிந்துகொண்டிருந்தது பூனுல்மணிதான் என்பதைத் தக்க சான்றுகளுடன் தோழர் சம்பூகன் வெட்ட வெளிச்சமாக்கி பார்ப்பன மணியின் பூனூலையும்,கோவனத்தையும் அறுத்தெறிந்து தமிழ் மனத்தில் தொங்க விட்டிருந்தார்.
முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கப்பார்க்கும் பார்ப்பன மணி, தோழர் சம்பூகனுடன் நேரடி விவாதத்திற்கு வர திராணியற்று ஓடி ஒழிந்துகொண்டிருக்கிறான்.
எவ்வளவு நேரமா வலிக்காத மாதிரியே நடிப்ப...உன்னைப் போன்ற க்ழிசடைகளை வேரோடு அழிக்கிறது தான் முதல் வேலை...
தோழர் சம்பூகனுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் பூனூல்மணி ஓடி ஒழிந்துகொண்டிருப்பதை நினைவு படுத்தி மீண்டும் பூனூல்மணியின் திரு(சாக்கடை) வாயைத் திறக்குமாறு அழைக்கவே இந்த்ப் பதிவை மீண்டும் இடுகிறேன்.
உனக்காக தான் செல்லம் வலைத்த்ளத்தின் மீது விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறேன்.
தயவு செய்து ஏமாற்றி விடாதே கண்ணு...
கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி...
குறிப்பு: கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் முற்போக்காளர்களை மோதவிடும் திருக்காரியத்தை தொடர்வதற்காகவும், தமது புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு அவதூறுகளை பரப்பி பார்ப்பன எதிர்ப்பு முகாமை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழ்மணத்திற்குள் மீண்டும் நுழைந்திருக்கிறார் திருவாளர் 'பார்ப்பன'மணி, தமிழ்மணத்தில் வாய்சவடால் அடித்துக் கொண்டும், விக்கிபீடியாவை கையில் வைத்துக் கொண்டு விவாதம் என்ற பெயரில் மொக்கையடித்துக் கொண்டும் தமிழ்மணி என்ற நாமகரணத்தோடு தமிழ்மணத்த்தில் உலவிவந்தது ஒரு சதிகார பார்ப்பன கும்பல் என்பதையும், அதில் ஆர்.எஸ்.எஸ் பாசிசவாதிகளும் அங்கம் வகிக்கிறார்கள் என்று எண்ணுவதற்கு இடமிருக்கிறது என்பதையும் சில மாதங்களுக்கு முன்பு நாம் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினோம்., அப்படி எழுதிய பதிவுகளில் நாம் எழுப்பிய தார்மீக ரீதியான எந்த கேள்விகளுக்கும் விடையளிக்காமல், ஆதாரத்தோடு மறுக்கவும் வக்கில்லாமல் கள்ள மெளனம் சாதித்து வந்த பார்ப்பனமணி கும்பல் அதன் பின்பு ஒருநாள் திடீரென காணமல் போனாது.,
இந்த நிலையில் சும்மா இருக்கப் பொறுக்காமல் அரிப்பெடுத்து போன தமிழ்மணி, தனது சதி செயலுக்கு அச்சாரம் போடுவதற்கு மீண்டும் தமிழ்மணத்தில் பிரவேசித்திருக்கிறார். 'தமிழ்மணியின் இந்த இரண்டாம் வருகையை பற்றியும் அவரை மனதார வரவேற்றும் பத்து நாட்களுக்கு முன்பு நான் ஒரு பதிவிட்டிருந்தேன், அந்த பதிவில் அவர் இதுவரை பதிலளிக்காமல் தவிர்த்து வரும் கேள்விகள் அடங்கிய நம்முடைய பழைய பதிவுகளையும் பட்டியலிட்டிருந்தேன். ஆனால் தமிழ்மணி தரப்பிலிருந்து எப்போதும் போலவே இப்போதும் நமக்கு மெளனம்தான் விடையாய் கிடைத்திருக்கிறது, அதே போல "சம்பூகன் கம்யூனிஸ்ட்தான்" என்ற எப்போதும் போலவே பின்னூட்டத்தில் பல பெயர்களில் முத்திரை குத்தும் முயற்சியும் தொடர்ந்தது, இப்பொழுது நாம் எழுப்பிய கேள்விகளையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு தமிழ்மணி மீண்டும் பதிவிட தொடங்கியிருக்கிறார், எருமைமாட்டின் மீது மழை பெய்தது போல நடந்து கொள்ளும் தமிழ்மணியின் இந்த மழுங்கத்தனமான செயல் பல்வேறுவிதமான பணி நெருக்கடிகளின் காரணமாக பதிவிடமால் இருந்த நம்மை மீண்டும் இணையத்திற்கு இழுத்து வந்திருக்கிறது, தமிழ்மணி இனி தொடர்ந்து பதிவிடும் நிலையில் அவர் போடும் பதிவுகளை கொண்டு அந்த பார்ப்பன கும்பலை அம்பலப்படுத்தும் நம்முடைய பதிவுகள் தொடர்ந்து வெளிவரும் என்று மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.,
கீழே இருப்பது தமிழ்மணியை அம்பலப்படுத்தி வெளியான நம்முடைய பழைய பதிவுகளில் ஒன்று, இப்பொழுது தன்னை பார்ப்பன எதிர்ப்பாளர் போல பாவ்லா காட்டிக் கொண்டு மாவோயிஸ்ட்களை நோக்கி விரலை நீட்டும் தமிழ்மணி, தனது பார்ப்பனீய அடையாளத்தை மறைக்கவியலாமல் தம்முடைய பழைய பதிவுகளில் கொடுத்த பல வாக்குமூலங்கள் இந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது, அதன் காரணமாகவே இதனை இங்கு மீண்டும் பதிந்திருக்கிறேன்.
கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி...
எவ்வளவு தூரம் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் "நான் ரொம்ப உத்தமனாக்கும்" என்று அங்கலாய்த்து கொள்வதற்கும், தனது வழக்கமான புரளி மூட்டைகளை திரும்ப திரும்ப அவிழ்த்து விடுவதற்கும் ஒரு அசட்டுத்துணிச்சல் வேண்டும், இந்த அசட்டு துணிச்சலானது பார்ப்பனர்களுக்கு இயல்பிலேயே கை கூடிய ஒன்று.,இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் சட்டமன்றத்திலேயே "நான் ஒரு பாப்பாத்தி" என்று பிரகடனப்படுத்திக் கொண்ட ஜெயலலிதா.,எப்பொழுதுமே ஆரிய கொழுப்பேறி அதிகார போதையில் திரியும் ஜெயலலிதா இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த போதையின் உச்சத்தில் சட்டமன்றத்தில் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியிருக்கிறார், வன்முறை வெறியாட்டத்தின் முழு உருவமான ஜெயலலிதா, கலைஞர் அரசில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பேசியிருப்பதோடு, சபை உறுப்பினர்களின் கேள்விகளூக்கெல்லாம் பதிலளிக்க துப்பில்லாமல் மூத்த உறுப்பினரான “இனமானப் பேராசிரியர்” என்று கலைஞரால் புகழப்பட்ட பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டவர்களை தரக்குறைவாக பேசியதோடு அவர் கொடுத்த பதிலடி தாங்கமுடியாமல் சபையை விட்டு வெளிநடப்பும் செய்திருக்கிறார். டான்சி வழக்கில் நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு, அந்த நிலத்தை திரும்ப தந்துவிடுவதாக கதறிய இந்த டான்சி ராணி,தி.மு.க அரசு ஊழல் புகாருக்காக முன்பு டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்றும் புளுகியிருக்கிறார்.இப்படி தன்னை பற்றி எழுப்பும் எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் "நீ ரொம்ப யோக்கியமா? " என்ற பாணியில் எதிரணியினரை அசட்டுத்துணிச்சலோடு தாக்குவது, பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுவது என்பதெல்லாம் எல்லோரும் நன்கறிந்த பார்ப்பன தந்திரங்கள்தான்.இது அரசியல் களத்தில் ஒரு உதாரணம் என்றால் இணையதளத்தில் இந்த பார்ப்பன அசட்டு துணிச்சலுக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் நமது தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணிதான், கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் அவர் திராவிட இயக்கத்தின் மீது வெறுப்பு கொண்ட பின்னூட்டங்களை ஆதரவளித்து அனுமதித்திருப்பதை சென்ற பதிவில் எடுத்துக்காட்டியோடு அவரது தளத்தில் "பழைய அனானி" “அனானி 2” என்ற பெயர்களில் தொடர்ந்து உலாவந்த பார்ப்பன இந்துமதவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு அவர் பேராதரவு அளித்தையும் சுட்டிக்காட்டியிருந்தேன், இவ்வளவுக்கு பிறகும் கூட நான் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காத தமிழ்மணி கும்பல் “நானும் நாத்திகன்தான், பெரியார் ஆதரவாளன்தான்” என்று கூறி தனது சதிச்செயலுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்று முயன்று முயன்று பார்க்கிறது.பழைய அனானி என்ற பெயரில் எழுதும் இந்துமத வெறியன் பதிலளிக்க துப்பில்லாமல், “சம்பூகனாக எழுதுவது பதிவர் அசுரனா?” என்று ஆருடம் பார்த்துக் கொண்டிருக்கிறான்,. ஆனால் இதற்கு முன்பு அவனை யார் என்று நண்பர்கள் வினவிய பொழுது அவன் அளித்திருக்கும் பதிலை பாருங்கள்.
“அனானியாய் வந்து ஆட்டம் போடுவது என்பதன் பொருள் எனக்குப் புரியவில்லை. வலையுலகில் எல்லோருமே அனானிகள் தான். கருத்துகள் தான் முக்கியம். மெய்ப்பொருள் காண்போமே.” (பதிவு இங்கே)கருத்துக்கள்தான் முக்கியம் என்று கூறிய இந்த பழைய அனானிக்கு அவரது கருத்துக்களின் வாயிலாகவே அவர் ஆரிய பார்ப்பன இந்துமத வெறிபிடித்த பாசிசவாதி என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறேன், அதனை மறுக்க வக்கில்லாமல், இது கம்யூனிஸ்ட்கள் வேலை என்று கதற துவங்கி இருக்கிறது தமிழ்மணி கும்பல் .நான் பதிவர் அசுரன் தான் என்று வதந்தி கிளப்புகிறார்கள், அசுரன் என்ன ஆர்.எஸ்.எஸ்காரனா? அவர் ஏன் சம்பூகனாக எழுத வேண்டும், அவர் பதிவுகளை நான் படித்த வகையில் அவரும் பார்ப்பனீயத்தை எதிர்ப்பதாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார், பெரியாரை ஆதரித்துத்தான் எழுதியிருக்கிறார், பின்பு எதற்காக அவர் சம்பூகனாக எழுத வேண்டும்?தனது கொள்கைக்கு நேரதிராக 'தமிழ்'மணி என்று பெயர்சூட்டிக் கொண்டு வெட்கங்கெட்ட முறையில் சமஸ்கிருதத்திற்கு ஆதரவளித்து எழுதிக் கொண்டிருக்கும் உன்னைப்பற்றி உனது கருத்துக்களிலிருந்தே அம்பலபபடுத்தி எழுதினால் அதனை மறுக்க துப்பில்லாமல் கிசுகிசு பேசும் ஆரிய பார்ப்பன வெறியனே உனது வேலைகள் இனி இங்கு பலிக்காது. வேறு ஏதாவது பெயரில் வரமுடியுமா என்று யோசி, உனது கார்யகர்த்தனிடம் (ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிரணைப்பாளன்) கேட்டுப்பார் அவன் வேறு எப்படி மோதவிட்டு இரத்தம் குடிக்கலாம் என்று புது யோசனை சொல்வான்.தமிழ்மணி என்பது செல்வன் என்னும் பதிவர்தான் என்பதாகவும், அந்த கும்பலில் அதியமான், அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் இருப்பதாகவும் பின்னூட்டத்தில் பல நண்பர்கள் கூறுகிறார்கள், ஆதாரம் காட்டுகிறார்கள் எனினும் கூட இந்த தொழில்நுட்ப ஆதராங்களை விடவும் தமிழ்மணி தனது வாயால் கொடுக்கிற வாக்குமூலங்களை ஆதாரமாக கொண்டே அவர் ஒரு ‘பார்ப்பன’மணி என்பதை நான் அம்பலப்படுத்த விரும்புகிறேன்சரி அவர் போட்டிருக்கும் சமீபத்திய பதிவினையும் அதில் முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அவரது அசட்டுத்துணிச்சலையும் இனி பார்ப்போம்.//சிவனடியார் ஆறுமுகசாமி - சிதம்பரம் - தமிழ் வழிபாடு போன்றவற்றில் என் கருத்துக்கள் பெரியார்தாசனின் கருத்துக்களை ஓட்டியவை (நான் நாத்திகன். ஆனால், அதனை முன்னிருத்தாதவன்).//தமிழ்மணி நாத்திகராம், எப்படிப்பட்ட நாத்திகர் என்று நினைக்கிறீர்கள், பார்பன பனியா சிந்தனை என்று நாத்திகர்களும், கம்யூனிஸ்ட்களும் ஒதுக்கி தள்ளூம் இந்துத்துவ கறை படிந்த சிந்தனைகளூக்கு வக்காலத்து வாங்கும் நாத்திகவாதி, நம்பவில்லையானால் இதோ தமிழ்மணி கூறியிருப்பதை பாருங்கள்
//இயற்கையோடு இணைந்து வாழக்கோரும் இந்திய சிந்தனையை பார்ப்பனிய பனியா என்று தினந்தோறும் காலைமுதல் மாலைவரை திட்டுவது நீங்கள்தானே//(பதிவு இங்கே)இப்படி பார்ப்பனீய பனியா சிந்தனைகளுக்கு வக்காலத்து வாங்கிய தமிழ்ணி இன்று தன்னை நாத்திகவாதி என்று கூறிக்கொள்கிறார், அதனை நாம் நம்ப வேண்டும், இப்படி நாம் கூறிய உடனே, "இந்திய சிந்தனை என்று பொதுவாகத்தானே கூறினேன்" கூறினேன் என்று தமிழ்மணி சப்பைகட்டு கட்டுவார், இவரது இந்திய சிந்தனை எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்ள அவரது இன்னொரு பதிவிலிருக்கும் ஸ்டேட்மண்டை கவனித்தால் நாம் அதனை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்
//அதே போல, பண்டைய இந்தியாவின் தொடர்பு மொழியாக இருந்தது சமஸ்கிருதம். இன்று தொடர்பு மொழியாக இருப்பது ஆங்கிலம். இரண்டின் மீது வெறுப்பு கொண்டிருப்பவர்களும்மக்கள் விரோதிகளே.//(பதிவு இங்கே)இதுதான் தமிழ்மணியின் இந்திய சிந்தனை, அதாவது சமஸ்கிருதத்தாலும் பூணூலாலும் கட்டி இணைக்கப்பட்ட பார்ப்பன மேலாதிக்கம் கொண்ட இந்தியாதான், பார்ப்பணமனி புளகாங்கிதம் அடையும் இந்தியா, அந்த பண்(ணா)டைய இந்தியாவில் தோன்றிய பண்(ணா)டை சிந்தனைகளான வேதம், ஸ்மிருதி போன்றவைகளை, நாத்திகவாதிகளான பெரியாரியவாதிகளும், மார்க்சியவாதிகளும் மறுக்கின்ற காரணத்தால்தான் அவர்கள் மீது சீற்றம் கொள்கிறார், தமிழ்மணி(எ)பார்ப்பனமணி.சமஸ்கிருதத்தால் இணைக்கப்பட்ட இந்தியாவை கனவு காண்கிறாரே தமிழ்மணி இது எந்த சிந்தனையின் தொடர்ச்சி என நினைக்கிறீர்கள், இதோ,
இந்த எல்லா மொழிகளுக்கும்(தமிழ், வங்காளம், மராட்டி, பஞ்சாபிபோன்றவை) ஜீவ ஊற்றாக உணர்வூட்டி வருவது மொழிகளுக்கெல்லாம் அரசி போன்ற தேவமொழியானசம்ஸ்கிருதம் ஆகும். அதனுடைய பொருட்செறிவினாலும், ஆன்மீக தொடர்பினாலும், அதுவே நம் நாட்டு மக்கள் கருத்தை வெளிப்படுத்த உதவும் பொதுமொழியாக இருக்கும் தகுதியுடையது-(ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் எழுதிய 'ஞானகங்கை' 2 பாகம் பக்.49)
நமது தேசிய மொழி பிரச்சணைக்கு வழி காணும் முறையில் சமஸ்கிருதம் அந்த இடத்தை பெறும்வரை, வசதிக்காக ஹிந்தி மொழிக்கு நாம் முன்னுரிமை தர வேண்டியிருக்கும்-(ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் எழுதிய 'ஞானகங்கை' 2 பாகம் பக்.51)நமது அன்பிற்குரிய தமிழ்மணி(எ)பார்ப்பனமணி, இந்தியாவின் தொடர்பு மொழி சமஸ்கிருதம்தான் என்பதாக வரிந்துகட்டி வாதாடுவதன் இரகசியம் இப்பொழுது புரிகிறதா நண்பர்களே?சமஸ்கிருதத்தாலும், இந்தியாலும் இணைக்கப்பட்ட இந்த இந்துராஷ்டிரம் பற்றி அய்யா பெரியாரின் கருத்தை பாருங்கள்
“தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது.”
சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவு இப்பொழுது புரிந்திருக்குமே தமிழ்மணி எப்படிப்பட்ட நாத்திகவாதி என்று, நவீண வகை ஜனநாயகவாதிகள் போல, இவர் இந்து ராஷ்டிரம் பேசுகின்ற நவீண வகை நாத்திகவாதி.அடுத்து அவர் கூறுகிறார் சிதம்பரம் விவாகரத்தில் பெரியார்தாசனின் கருத்துதான் அவருடைய கருத்தாம்.,அட அட இப்பொழுது கம்யூனிஸ்ட்களை திட்டுவதற்காக பெரியார்தாசனோடு போய் ஒட்டிக்கொள்ளும் தமிழ்மணி சென்ற பதிவில் அவரை பற்றி எழுதிய வரியை பாருங்களேன்.
//பெரியார்தாசன் சிவனை கேவலமாக பேசியிருக்கிறார். மருதையன் நாத்திகர். சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலையிலேயேகடவுள் இல்லை, கடவுளை பரப்பியன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி போன்றவற்றை கூறப்போகிறீர்களா? சிவனெல்லாம் ஒரு கடவுளா என்பவற்றை பேசுவீர்களா?//(பதிவு இங்கே)இப்படியெல்லாம் சென்ற பதிவில் நாத்திகர்களை நோக்கி கேள்வி எழுப்பிவிட்டு, பெரியார்தாசன் சிவனை நோக்கி கேவலமாக பேசினாரே என்று சினந்து பேசிவிட்டு, இன்று "பெரியார்தாசனின் நிலைப்பாடும் எனது நிலைபாடும் ஒன்றுதான், நானும் நாத்திகன்தான்" என்று ஒருவர் பேசுவாரேயானால் அவர் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருக்கவேண்டும், நம்மை எவ்வளவு தூரத்திற்கு முட்டாள் என்று அவர் நினைக்க வேண்டும். நான் கூறிய பார்ப்பனீய அசட்டுத்துணிச்சல் தமிழ்மணியிடம் எவ்வளவு இருக்கிறது பார்த்தீர்களா, நண்பர்களே?//ஆனால், இது சம்பந்தமாக மகஇக என்ற கம்யூனிஸ்டு இயக்கம் இதனை உபயோகித்து ஆள் சேர்க்க இறங்கியபோது, இதன் அபாயத்தை உணர்த்தும் விதமாக பதிவுகள் எழுதினேன். கம்யூனிஸ எதிர்ப்பை வழக்கம்போல, பார்ப்பன ஆதரவு, திராவிட எதிர்ப்பு என்று திரிக்கும் வேலைகள் நடந்துகொண்டிருப்பது எனக்கு அதிர்ச்சி இல்லை. இதனை எதிர்பார்த்தேன்.//என்ன அபாயத்தை, உணர்த்தும் விதமாக பதிவுகள் எழுதினீர்கள், தமிழ் கருவறையில் நுழைந்துவிடும் அபாயத்தை உணர்த்துவதாகவா, ஏதோ நீங்கள் இந்த பதிவு எழுதிய பிறகு அந்த ஒரு பதிவை வைத்து உங்களை 'திராவிட எதிர்ப்பு' 'பார்ப்பன ஆதரவு' பதிவர் என்று கூறியது போல பேசுகிறீர்களே தமிழ்மணி, உங்கள் பதிவில் பல காலமாக பழைய அனானி என்ற பெயரில் "திராவிட இனவெறி அரசியல்" என்றும் "கேவலமான திராவிட அரசியல்" என்றும் திராவிட எதிர்ப்பு பின்னூட்டங்கள் போட்டு வந்திருக்கிறார், நேற்றைய இந்த பதிவிலே அதனை நான் எடுத்துக்காட்டியிருக்கிறேன். இப்படி போடப்பட்ட பின்னூட்டதிலிருக்கும் இந்த கருத்துக்களுக்கு ஒருமுறை கூட நீங்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லையே அதன் காரணம் என்ன தமிழ்மணி?//மேற்குலகின் ஏஜண்டாக தெரசாவும் கத்தோலிக்க திருச்சபையும், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவ என் ஜிஓக்களும் செயல்படுகின்றனவோ, அதே போல சீனாவின் ரஷியாவின் ஏஜண்டாக இந்தியாவின் கம்யூனிஸ்டு கட்சிகளும் அவர்களின் என் ஜி ஓக்களும் செயல்படுகின்றன என்பதையும் நேரடியாக எழுதியுள்ளீர்களா? படிக்க விரும்புகிறேன்.என்னைப்பொருத்தமட்டில், எவ்வாறு தெரசாவின் புனித பிம்பம் மேற்குலகால் இந்தியாவில் கட்டமைக்கப்படுகிறதோ அதே போல, ரஷியர்களாலும் சீனர்களாலும், இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள், அறிவுஜீவிகள் புனித பிம்பமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய கருத்தாக்க நாணயத்தின் இரண்டு பக்கங்களே இவர்கள்.ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. மேற்குலகின் புனித பிம்பங்கள் உருவாக்கத்தின் இடையில் ஒரு சிலருக்கு ஆறுதலோ, உணவோ பால்பவுடரோ, தற்காலிக மன ஆறுதலோ கிடைக்கிறது.// (பதிவு இங்கே)இப்படி ஒரு பதிவிலே நீங்கள் எழுதியிருக்கிறீர்கள், அதாவது மேற்குலக மதமான கிறிஸ்தவத்தின் ஏஜென்டாக தெரசாவும், கத்தோலிக்க திருச்சபையும், கிறிஸ்தவ என்.ஜி.ஓக்களூம் செயல்படுவதாக குறிப்பிட்டு அவர்களோடு கம்யூனிஸ்ட்களையும் ஒப்பிட்டு, இவர்கள் இருவருமே ஏகாதிபத்திய(அதாவது கிறிஸ்தவ ஏகாதிபத்தியம்) கருத்தாக்கத்தின் இரண்டு நாணயங்கள் என்று முடிவுக்கு வந்து//மேற்குலகின் புனித பிம்பங்கள் உருவாக்கத்தின் இடையில் ஒரு சிலருக்கு ஆறுதலோ, உணவோ பால்பவுடரோ, தற்காலிக மன ஆறுதலோ கிடைக்கிறது.//இப்படி குறிப்பிடுகிறீர்கள், எனக்கு தெரிந்த வரையில் 'கிருத்துவ ஏகாதிபத்தியம்' என்ற கருத்தாக்கமே இந்துத்துவ வெறியர்களுடையது, அதை விட 'பால்பவுடருக்காக' மதம் மாறுகிறார்கள் என்று மதம்மாறுகின்ற மக்களை பார்த்து இழிவுபடுத்துவதும், அலறுவதும், அச்சுஅசல் இந்துமதவெறியர்களுக்கே உரிய கருத்து, இப்படி ஒரு இந்துத்துவ கருத்தை வைத்திருக்கும் பார்ப்பன வெறியரான நீங்கள் "நான் திராவிட எதிர்ப்பாளன் அல்ல" என்று கூறினால் எவனும் வாயால் சிரிக்கமாட்டான் தமிழ்மணி.//சமீபகாலமாக ஒரு டிரண்ட் நட்ந்துவந்துகொண்டிருக்கிறது. அது திராவிட/பார்ப்பன எதிர்ப்பு பதிவர்களை குறி வைத்து அவர்களை கம்யூனிஸ்டு கட்சிக்குள் உள்ளிழுக்கும் விதமாக கம்யூனிஸ்டுகள் (ஒரே ஆளா, அல்லது கும்பலா என்று தெரியாது) பல பதிவுகளை துவங்கி ஒரே கட்டுரையை பல்வேறு இடங்களில் பதிந்தும் ஒரு திட்டமிட்ட அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தனர்.//பல காலமாகவே தமிழ்மணத்தில் ஒரு டிரண்ட் நடந்துவருவதாக எங்களது நண்பர்களும் தோழர்களும் கூறுகிறார்கள் தமிழ்மணி, அதாவது இஸ்லாமியர்களின் பெயரில் ஆபாச பதிவு தொடங்கி எழுதுவது, நடுநிலை நாடகமாடி சிண்டு முடிவது, நேற்று கூட எங்களது அ.மு.க நண்பர்கள் இது போன்ற பார்ப்பன சதி ஒன்றை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள், இஸ்லாமியர் பெயரிலும், கிறிஸ்தவர்களின் பெயரிலும் பதிவுகளை தொடங்கி இருவரையும் மோதவிடும் சதியை கண்டுபிடித்திருக்கிறார்கள்,கம்யூனிஸ்ட்களையும் மற்ற முற்போக்காளர்களையும் மோதவிடும் சதியை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள், இதெல்லாம் எதற்காக பார்ப்பனர்கள் செய்கிறார்கள், தங்களுடைய மேலாதிக்கம் கொண்ட இந்த சமூகத்தை கம்யூனிஸ்ட்களோ பெரியாரியவாதிகளோ மாற்றிவிடக்கூடாது என்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கிறது. இதற்காக பலர் சேர்ந்து ஒரு பதிவை எழுதுவது, பல பதிவை ஒருவர் எழுதுவது என்று பார்ப்பனர்கள் பல்வேறு திட்டமிட்ட அனுகுமுறையை கையாண்டு வருகிறார்கள்.//இதன் விளைவுகள் நீண்டவை.//ஆனால் பார்ப்பனர்கள் கையாளும் இந்த கேவலமான உத்தியின் விளைவுகள் எப்பொழுதுமே புஸ்வாணம்தான் என்று நண்பர்கள் கூறுகிறார்கள், பார்ப்பனர்கள் இப்படியெல்லாம் சதிச்செயலிலே இறங்கி நமது நண்பர்களிடம் கையும் களவுமாக வசமாக மாட்டியதுதான் தமிழ்மணத்தின் கடந்த கால வரலாறாக இருக்கிறது.//கடந்த நூற்றாண்டில் ஒரு பெரிய வீழ்ச்சியை கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டில் சந்தித்தார்கள். அது பற்றி "கலைஞருக்கு பாரத ரத்னா" என்ற பதிவில் சுட்டியிருந்தேன்.திராவிட முன்னேற்ற கழகமும், பெரியாரிய சிந்தனைகளும், அன்றைக்கு பிரபலமாக இருந்த கம்யூனிஸ்டு சிந்தனைகளுக்கும், காங்கிரஸ் சிந்தனைகளுக்கும் மாற்றாக வந்து, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இனத்தினரின் எழுச்சியாக வந்தது.//இப்படியாக ஆரம்பித்து தனது அபத்தங்களை அள்ளித்தெளித்திருக்கிறார் தமிழ்மணி, திராவிட இயக்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒழித்துக்கட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டிருப்பது போல எழுதியிருக்கிறார், அதற்கு பின்பு வழக்கம் போல கம்யூனிச எதிர்ப்பு ஜல்லி, இடையே பா.ஜ.க ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட இயக்கம் என்ற பச்சை புளுகு வேறு.,சரி, அவரது வழக்கமான கம்யூனிச எதிர்ப்பு ஜல்லிகளை புறந்தள்ளிவிட்டு, மற்ற விசயங்களின் மீது மட்டும் கவனம் செலுத்துவோம், தமிழ்மணி கூறுகிறார் அன்று பிரபலமாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, பெரியாரிய இயக்கமும், தி.மு.கவும் மாற்றாக இருந்ததாம் இது எவ்வளவு பெரிய அபத்தம். கம்யூனிஸ கொள்கை தமிழகத்தில் பிரபலமானதற்கு காரணமே தந்தை பெரியார்தான்,"கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை" தமிழில் முதன்முதலாக மொழிபெயர்த்து தனது குடியரசு பத்திரிக்கையில் வெளியிட்டவர் தந்தை பெரியார், பகத்சிங்கை வெள்ளை அரசாங்கம் தூக்கிலிட்ட பொழுது, தேசபக்தர்கள் என்று தம்மை கூறிக்கொண்டவர்கள் எல்லாம் அஞ்சி நடுங்கி அதனை கண்டிக்க தயங்கிய நேரத்தில், பகத்சிங் ஒரு பொதுவுடைமைவாதி என்ற காரணத்துக்காகவே தனது குடியரசு பத்திரிக்கையில் ஆதரித்து எழுதியதோடு வெள்ளை அரசாஙக்த்தை கண்டிக்கவும் செய்தார் அய்யா பெரியார்(ஆதாரம்: "நான் நாத்திகன் ஏன்" புத்தகத்தின் பின்னிணைப்பு).,தனது இறுதி மூச்சுவரை தந்தை பெரியார் கம்யூனிச கொள்கைகளின் மீது ஈர்ப்பு கொண்டவராகவே இருந்தார், அதற்கு எவ்வளவோ ஆதாரங்களை காட்டமுடியும், அவர் கம்யூனிஸ்ட்களோடு கொண்டிருந்த முரண்பாடு என்பது நடைமுறையை அடிப்படையாக கொண்டது, பிறவி இழிவுக்கு எதிராக ஒரு சமுதாய புரட்சிக்காக போராடாமல், ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிப்பதாலோ அரசியல் புரட்சி நடத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதாலோ எதுவும் நடந்துவிடாது என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்தாக இருந்தது ஆனால் இறுதிமூச்சுவரை அவர் கம்யூனிச கொள்கைகளை என்றுமே எதிர்த்ததில்லை.,இரசியா போய் அங்கு கம்யூனிஸ்ட்களால் ஏற்பட்டிருக்கும் அபாரமான வளர்ச்சியையும், அங்கு நிலவும் சமத்துவ உறவினையும் கண்டுவந்த பெரியார் கம்யூனிசத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார், அதற்கு பின்பு அவர் பேசிவந்த மேடைகளில் தீவிர பொதுவுடைமை வாடை வீசியது, இதற்காக அவரை வெள்ளை அரசாங்கம் தண்டிக்க முற்பட்டது. இது பற்றி ஒரு கூட்டத்தில் அவர் பேசும் பொழுது இப்படி குறிப்பிட்டார்
"நான் இரசியாவுக்கு போவதற்கு முன்பே, பொதுவுடைமைத் தத்துவத்தை சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசிவந்தது உண்மைதான், ரசியாவில் இருந்து வந்தவுடன் அதை இன்னும் தீவிரமாக பிரச்சாரம் செய்ததும் உண்மைதான்."(23.3.1936 பட்டூக்கோட்டையில் பேசியது) பிறவி இழிவை ஒழிக்கும் சமூக புரட்சிக்கென பெரியார் செயலாற்றினாலும் கூடபொதுவுடைமைக் கொள்கை மீதானதனது பற்றையும், பிரச்சாராத்தையும் அவர் எப்பொழுதுமே விட்டுவிடவில்லை, இதன் காரணமாகத்தான், அவர் நடத்திவந்த விடுதலை பத்திரிக்கை, ரசிய புரட்சியின் 50வது ஆண்டு மலரை 1966ல் கொண்டுவந்தது. அதில் எழுதிய தந்தை பெரியார் இப்படி எழுதினார்.
"இந்நாடு கம்யூனிச நாடாவதே என் விருப்பம். சோசலிசம்,கம்யூனிசம்,சமதர்மம் பரவுவதற்காக என்று இரசியாவே இங்கு வந்தாலும் நான் வரவேற்பேன்"
(9.2.1966 விடுதலை)மேற்கண்ட அவருடைய வாக்கியம் அவர் கம்யூனிசத்தின் மீது எந்த அளவுக்கு ஈர்ப்பு கொண்டிருந்தார் என்பதை நிரூபிக்கிறதல்லவா? முதலாளித்துவமும் தனிமனித சொத்துரிமையும் ஒழிய வேண்டுமென்று பெரியார் எழுதியதை பாருங்கள்
"எனவே, தனிமனித சொத்துரிமை ஒழிய வேண்டும்,பிறர் உழைப்பில் படோடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகபடியான பொருள்களூக்கு அதிபதியாய் இருப்பதும் பெருமையான வாழ்க்கை என்று கருதுகிற மூடநம்பிக்கை ஒழிய வேண்டும், இதில் கவுரவமும், மரியாதையும் இல்லை என்பது தெளிவாக்கப்படவேண்டும்" இப்படி பேசிய பெரியாரைத்தான் கம்யூனிசத்திற்கு எதிராகவே கட்சி தொடங்கி முதலாளிகளுக்கு சேவை செய்தது போல புளுகுகிறார் தமிழ்மணி.,பெரியார், புகழ்பெற்ற அவரது இறுதிப் பேருரையிலே பேசிய சொற்கள் அவரது உள்ளக்கிடக்கையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. கம்யூனிச கொள்கை என்பது அனைத்து வகை ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிரானது, அது சாதிய இழிவையும் கண்டிக்க வேண்டும் என்று உணர்ந்திருந்த தந்தை பெரியார், அதனை செய்யாத கம்யூனிஸ்ட்கள் மீது தனது வெறுப்பை வெளிப்படுத்துகிறார்
"இந்தக் கம்யூனிஸ்டே(இந்தியாவிலிருப்பவர்கள்) வந்துவிட்டான் என்றால், அவன் காசுக்கு என்றால் என்ன வேணும்னாலும் பண்ணுவானே, அவனல்லவா சத்தம் போட வேண்டும் எனக்கு பதிலாக? எங்களை தவிர நாதியில்லை இந்த நாட்டில்"(19.12.1973)
உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாகஇந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.
(27.4.1953 அன்று, மன்னார்குடி வல்லூரில் ஆற்றிய உரை.)பெரியார் பார்ப்பன கட்சிகளாக இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் எதிர்த்தாரே ஒழிய கம்யூனிச கொள்கைகளை எதிர்க்கவில்லையென்பதற்கு இப்படி நாம் பல ஆதாரங்களை எடுத்துக்காட்ட முடியும்., ஆனால் தமிழ்மணி என்கிற 'பார்ப்பன'மணி எந்த ஆதாமும் இல்லாமல் பிரபலமாக இருந்த கம்யூனிசத்திற்கு மாற்றாக பெரியாரியம் வந்தது என்று கூறுகிறார், ஆனால் உண்மையில் கம்யூனிசத்தை இந்த நாட்டில் பிரபலப்படுத்தியதே தந்தை பெரியார்தான்.,உண்மைகள் இப்படி இருக்கும் பொழுது தனது பிரித்தாளும் சூழ்ச்சிக்கேற்ப பெரியாரிய கொள்கைகளை கம்யூனிசத்திற்கு எதிராக நிறுத்துகிறார். தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணி.இப்படி அவர் நிறுத்துவதன் நோக்கம் என்ன என்பதை நாம் சொல்லுவதை காட்டிலும், அவரது இந்துத்துவ சகலப்பாடியான கால்கரி சிவா இட்டிருக்கும் பின்னூட்டத்திலிருந்து எடுத்துக்காட்டுவது இங்கு சிறப்பாக இருக்கும்
கால்கரி சிவா said... எப்பிடியோ கருநாநிதியை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக திருப்பிவிட்டீர்கள்?ஐயா தாங்கள் சதுரங்கத்தில் புலியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன் சரியா?சரியான அரசியல்வாதி ஐயா தாங்கள்.(பதிவு இங்கே)தமிழ்மணியின் நோக்கத்தை, அவரது வெற்றியை பாராட்டும்விதமாக கால்கரி சிவா அவரது பின்னூட்டத்தில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்.//நக்ஸ்லைட்டுகளால் எந்த தொழில் முன்னேற்றம் இல்லையோ அதே தொழில் முன்னேற்றத்தை தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அடையும்போது அதனை கெடுக்கும் வேலையையும், அந்த தொழிற்துறையால் படித்து பட்டம் பெற்று வேலையில் இருக்கும் இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்து தன்னை வளர்ப்பதையும் கம்யூனிஸ்டு இயக்கங்கள் செய்து வருகின்றன.//முற்போக்காளர்களை மோதவிட்டு இரத்தம் குடிக்க துடிக்கும் தமிழ்மணியின் கட்டுரை, இப்படி இராமகோபாலய்யர் பிராண்டு நக்ஸலைட்டு பூச்சாண்டி காட்டியபடி தொடர்கிறது.இப்படியாக தொடர்ந்து கொண்டே போகும் தமிழ்மணியின் அபத்தங்கள், அத்தனைக்கும் நாம் பதிலளிக்க இறங்கினால் நாளை நம்மால் பதிவு போட முடியாது ஏனென்றால் தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சுற்றி பைத்தியம் பிடித்துவிடும்.,இதற்கெல்லாம் பதிலளித்து தமிழ்மணியை நாம் அம்பலப்படுத்துவதை காட்டிலும், ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறியன் ஒருவன் திராவிட இயக்கங்களின் மீது வெறுப்பை கக்கி தமிழ்மணியின் தளத்தில் போட்டிருந்த பின்னூட்டங்களை பற்றியும், அதனை அவர் எந்த ட்சேபனையும் இல்லாமல் பதிவாக எடுத்துப் போட்டு அவனை ஊக்கப்படுத்தியது பற்றியும் இரண்டு நாட்களுக்கு முந்தைய பதிவில் விளக்கமாக எடுத்துக்காட்டியிருக்கிறேன், இந்த பதிவிலேயே தமிழ்மணி வெளியிட்டிருக்கும் இந்துத்துவ கருத்துக்களை எடுத்துக்காட்டியிருக்கிறேன். இதெற்கெல்லாம் அவர் என்ன பதிலளிக்கிறார் என்பதை கேட்டாலே போதுமானது, ஒரு மிகச்சிறந்த குட்டிக்கரண காட்சியை நாம் காண முடியும்., அல்லது கம்யூனிச சதி என்ற அலறலை கேட்க முடியும்.,
Posted by சம்பூகன் at 9:02 PM
7 comments:
சம்பூகன் said...
test
May 13, 2008 12:11 AM
தமிழச்சி said...
அழகான சான்றுகளுடன் அருமையாக கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களைப் போன்று நான்கு பேர்கள் இருந்தால் போதும்! இணையத்திற்குள் ஊடுருவ முயலும் பார்ப்பனீய ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டிவிடலாம்.
May 13, 2008 3:58 AM
Anonymous said...
நீங்க சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒரே வரியில் மறுத்துள்ளான் அந்த மொள்ளமாறி பார்ப்பனமணி. அதாவது அவனும் பார்ப்பன எதிர்ப்பாளனாம். அப்படியென்றால் இது வரை அவன் பதிவில் எழுதியதெல்லாம் என்ன அவன் அப்பனா வந்து எழுதினான்?
May 13, 2008 7:13 AM
Anonymous said...
Just like paarpaan mani, there is one more reentry recently in the name of "paraman pitha" (note the christian name) this guy was driven out of thamizhmanam long back by asuran, koviKannan, others. And before that this guy was chucked out from thinnai and marathadi. i think these are all same guys from paarpana gumbal
May 13, 2008 9:24 AM
ஏகலைவன் said...
நம் தேசத்தை அச்சுறுத்தும் இருபெரும் அபாயங்களான மறுகாலணியாதிக் கத்தையும் பார்ப்பன பயங்கரவாதத்தையும் எந்தவிதமான சமரசமுமின்றி எதிர்த்து களத்தில் நிற்பது எமது அமைப்புதான்.குறிப்பாக இந்துவெறி பாசிச நடவடிக்கைகள், எமது அமைப்பின் தோழர்களால் தொடர்ந்து மக்கள் மத்தியில் திரைகிழிக்கப்பட்டு, தமிழகத்தில் சங்கபரிவார வளர்ச்சிக்குப் பெருந்தடையாக நிற்கிறது.இவ்வாறான எமது நடவடிக்கைகளை களத்தில் எதிர்கொள்ளத் திராணியற்ற இந்துவெறி பாசிஸ்டுகளும், ஏகாதிபத்திய அடிவருடிகளும் நம்மை இழிவுபடுத்தும் நோக்கில், கம்யூனிசத்தை அவதூறு செய்து வருகின்றனர்.இணையத்தில் வெகுவாக ஆக்கிரமித்திருந்த இந்துவெறிக் கும்பலின் மிச்ச சொச்சங்களான, அரவிந்தன் நீலகண்டன், அதியமான், ஜடாயு போன்ற அம்பிகளும், அமெரிக்க பூட்ஸ் நக்கி 'டாலர்'செல்வனும் கூட்டாக இணைந்து தமிழ்மணி என்ற பெயருக்குள் ஒளிந்துகொண்டு இங்கே கம்யூனிச அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர்.கம்யூனிஸ்டுகளையும் திராவிட இயக்கத்தோழர்களையும் மோதவிடும் நோக்கில் பலமுறை இவர்கள் எழுதிவந்தனர். இவர்களின் இத்தகைய சதிவேலைகளை சம்பூகன் என்ற தோழர், அவர்களின் வார்த்தைகளிலிருந்தே ஆதாரங்களை எடுத்து, இது மேற்கண்ட பார்ப்பனக் கும்பலின் சதிவேலைதான் என்று தெளிவாக அம்பலப்படுத்திவிட்டார்.அதற்கு பதில் சொல்லப் பயந்து, பதுங்கி இணையத்தின் பக்கமே தலைகாட்டாமல் இருந்த இந்த அம்பிகள், நேபாள மக்கள் எழுச்சியின் விளைவாக நடைபெற்ற தேர்தலில் மாவோயிஸ்டுகள் பெரும்பான்மைபெற்று, அங்கிருந்த இந்துராச்சியத்தை அடித்து வீழ்த்தியதன் விளைவை பொறுக்கமாட்டாமல், தமது அவதூறு கருத்துக்களை மீண்டும் அள்ளித் தெளிக்க இங்கே ப்ரசன்னமாகியிருக்கின்றனர்.அவர்கள் தம்மை பொதுவாக கம்யூனிச எதிரி என்று அறிவித்துக் கொண்டு செயல்பட்டாலும், அவர்களுடைய நிரந்தர இலக்கு நாம் தான் என்பது அவர்களுடைய தொடர் நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், முதலில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக திராவிட இயக்கங்களை ஆதரித்த இவர்கள், இப்போது போலிகம்யூனிஸ்டு முகாமைச் சேர்ந்த சந்திப்புடன் கரம் கோர்த்திருக்கிறார்கள். மார்க்ஸ் முதல் மாவோ வரை அனைத்து கம்யூனிச ஆசான்களையும் வசைமாறி பொழிந்து இழிவுபடுத்தியதுமில்லாமல், நமது தோழர்களையும் அமைப்பையும் வெளிப்படையாக கொச்சைப்படுத்திவந்த இவர்களுக்கு, சி.பி.எம். என்ற போலி கம்யூனிஸ்டு கட்சி மிகவும் உகந்ததாம். அக்கட்சியின் செயல்பாடுகள் இவர்களை வெகுவாகக் கவருகின்றனவாம். இதிலிருந்தே இவர்கள் எந்த அடிப்படையிலானவர்கள் என்பது தெளிவாக விளங்கும். போலிகளின் அடையாளத்தை இதைவிட யாரும் தெளிவாக அம்பலப்படுத்திவிட முடியாது. இவர்கள் கரம் கோர்த்து செயல்படுவதுதான், நாமும் நம்முடைய பாதையும் சரியானது என்பதை உரக்கச் சொல்லும் சான்றுகள். இவ்வளவு சொல்லியும், "அப்படியெல்லாம் கிடையாது, எமது சந்திப்பு அவர்களும், அவர் சார்ந்த இயக்கமும்! சொக்கத் தங்கம்" என்று வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானால் உம்முடைய சொக்கத் தங்கம் இன்றுவரை தமிழ்மணியின் தொடர்ச்சியான கம்யூனிச அவதூறுகளுக்கு ஒரு எழுத்தில் கூட பதில் சொல்லாதது ஏன்?சி.பி.எம்.மை ஆதரித்து இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு, கம்யூனிச ஆசான்களை இரண்டு பக்கத்துக்கு வசைபாடினால் நம்ம சந்திப்புக்கும் அவருடைய கட்சிக்கும் எதுவுமே உரைக்காதா?இதுவரை எமது பல கேள்விகளுக்கு பதில் சொல்லாத சந்திப்புக்கு இன்னுமொரு கேள்வியை இதன் வாயிலாக வைக்கலாமென்று நினைக்கிறேன்."நன்றாக உபசரித்து விதம்விதமான பலகாரங்களுடன் விருந்து பரிமாறிவிட்டு இலையின் ஓரத்தில் ஒருதுளி பீயை வெச்சா சாப்புடுவியா?" என்று கிராமத்தில் சொரனையை வலியுறுத்துகின்ற ஒரு சொல்லாடல் உண்டு. நான் அதுபோல சந்திப்பைக் கேட்கமாட்டேன். இந்த தமிழ்மணி கும்பல் நம்ம சந்திப்புக்கு விருந்து உபசரிக்கும் முறை இதற்கு நேரெதிரானது அல்லவா?அதனால், "இலை முழுவதும் பீயையும் எருமைச் சாணியையும் வைத்துவிட்டு அவற்றுக் கிடையில் ஒரு துண்டு (சி.பி.எம். பாராட்டு என்ற) திருநெல்வேலி அல்வாவை வைத்தால், அதை ஏற்றுக்கொள்வீரா???" சந்திப்பு அவர்களே, இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்வீர்கள் என்றுகூட நான் எதிர்பார்க்கவில்லை. மாறாக தமிழ்மணி என்கிற பார்ப்பனமணிக்கு நீர் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்பதை மட்டும் பொறுத்திருந்து பார்க்கிறோம். இதற்கு மேலும் உமது சொரனையற்ற தன்மை தொடருமேயானால் என்ன செய்வது என்பதை வாசகரின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.ஏகலைவன்.
May 13, 2008 10:18 AM
Anonymous said...
//ஒரு மிகச்சிறந்த குட்டிக்கரண காட்சியை நாம் காண முடியும்., அல்லது கம்யூனிச சதி என்ற அலறலை கேட்க முடியும்., ///ஹா....ஹா... இரண்டும் நடந்துவிட்டது. நானும் பார்ப்பன எதிர்பாளந்தான் என்ற ஒரு குட்டிகரணமும், தமிழ்மணியை எதிர்ப்பவர்கள் எல்லாம் கம்யுனிஸ்டுகள்தான் என்று அலறலும் நடந்தேறிவிட்டது.
May 14, 2008 5:08 AM
தமிழ் ஓவியா said...
மிகச்சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.பார்ப்பனிய கும்பலுக்கு சரியான பதிலடியை சான்றுகளுடன் தந்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
Saturday, July 19, 2008
தமிழ்மணி (எ) 'இரட்டை நாக்கு அம்பி'யின் பொய்கள், புரட்டுகள்....
தமிழ்மணி (எ) 'இரட்டை நாக்கு அம்பி'யின் பொய்கள், புரட்டுகள்....
தமிழ் வழிபாட்டுரிமையை வலியுறுத்தி சிதம்பரத்தில் நடத்த பொதுக்கூட்ட அழைப்பிதழை போட்டு தமிழ்மணி சில கேள்விகளை எழுப்பியிருந்தார், அதிலிருந்த கேள்விகள் பொதுவாக நாத்திகர்களை நோக்கி எழுப்பப்பட்டிருந்ததாலும், தமிழ்மணி எழுதிய அப்பதிவு சமஸ்கிருத ஆதரவு பார்ப்பனீய உள்ளடக்கத்தை கொண்டிருந்ததாலும் அதற்கு பதிலளிக்கும் முகமாக இந்த பதிவினை போட்டு, தமிழ்மணியின் கேள்விகளுக்கு பதிலளித்து அதனை விளக்கியிருந்ததோடு, அடிப்படையான சில கேள்விகளையும் நான் எழுப்பியிருந்தேன்.ஒரு நாள் முழுக்க அந்த பதிவு தமிழ்மண திரட்டியின் முகப்பிலேயே இருந்தது, காரணம் பதிவர் சதுக்கபூதம் என்பவர் தமிழ்மணிக்கு ஆதரவாக நம்முடன் தொடர்ச்சியாக வாதிட்டார், கிட்டதிட்ட 80 பதிவர்களுக்கு மேல் அப்பொழுதே அந்த பதிவை படித்திருந்தனர், ஆனால் நாம் யாருக்காக விளக்கங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருந்தோமோ அந்த தமிழ்மணி இந்த பதிவினை படிக்கவில்லையாம்//நண்பர் சம்புகன்,உங்கள் பதிவுகளை இப்போதுதான் பார்த்தேன். அதனால், பதிவுக்கு பதில் எழுதாததற்கு மன்னிக்கவும். ஆனால், உங்களது இந்த கேள்விகளுக்கான பதில்களையும் ஏற்கெனவே பலர் கேட்டிருக்கின்றனர். அதற்கான பதிலையும் மறுமொழியாக என் பதிவிலேயே எழுதியிருக்கிறேன்.//என்று இப்போது கூறியிருக்கிறார். நாமும் நம்புவோமாக. தமிழ்மணி(எ)’பார்ப்பன’மணிக்கு எப்பொழுதுமே தூரப்பார்வைதான் போல தெரிகிறது, சீனா, ரஷ்யா, கம்போடியா, லாவோஸ், கியூபா, கொரியா, அமெரிக்கா என்று எப்பொழுதும் எல்லை கடந்து துலாவிக்கொண்டிருக்கும் தமிழ்மணி உள்ளூர் பிரச்சணைகளை பற்றியோ அதற்கான தீர்வினை பற்றியோ இதுவரை எழுதியதாக தெரியவில்லை மாறாக கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் மட்டுமே இதுவரை ஜல்லியடித்து வந்திருக்கிறார்.,கம்யூனிஸ்டுகள் சர்வாதிகாரிகள் என்று ஒவ்வொரு பதிவிலும் எழுதி வந்திருக்கிறார், இது போன்ற பதிவுகளுக்கு நேற்று வரை பதிவிட்டு ஆதரவு தெரிவித்து வந்த நண்பர் சதுக்க பூதம் இன்று நமக்கு அனுப்பியிருக்கும் பின்னூட்டத்தை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாக இருக்கும்
சதுக்கபூதம் said,
There seems to be some truth in urview.Hindu-Hindi(sanskrit)-India facism is more dangerous than dictatorship.
இதன் பொருள் என்னவென்றால் உங்களுடைய(சம்பூகன்) பார்வையில்(தமிழ்மணி விவகாரத்தில்)உண்மை இருப்பதாக தெரிகிறது, இந்து இந்தி(சமஸ்கிருதம்) இந்திய பாசிசம் ஆகியவை(கம்யூனிச)சர்வாதிகாரத்தைகாட்டிலும் அபாயகரமானவை.சதுக்க பூதம் இப்படி கூறியிருக்கிறார், தமிழ்மணியின் பதிவுகளை தொடர்ந்து படித்து அதற்கு பின்னூட்டம் இட்டு வந்த ஒரு பதிவரே இவ்வாறு கூறியிருப்பதன் மூலமாக தமிழ்மணியை(எ) 'பார்ப்பன'மணியை தெளிவாக புரிந்து கொள்ளமுடிகிறதல்லவா, இதனை அனைத்து பதிவர்களும் படிப்பினையாக எடுத்துக்கொண்டு, இது போன்று முகமூடி போட்டுக்கொண்டு வரும் பார்ப்பனர்களிடம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இன்று தமிழ்மணி என்ற பெயரில் தமிழர்க்கு விரோதமாக எழுதும் இவர்கள், நாளை பெரியார் பெயரில் ஆர்.எஸ்.எஸ்க்கு ஆதரவாகவும் எழுதுவார்கள்.சரி இனி தமிழ்மணி போட்டிருக்கும் பதில்களை பார்ப்போம், இங்கு இன்னொரு விசயத்தை குறிப்பிட்டாக வேண்டும், தமிழ் வழிபாட்டுரிமைக்கு எதிராக தமிழ்மணி தெரிவித்த கருத்துக்களை எடுத்துக்காட்டியதன் பின்னினைப்பாகத்தான் எனது கேள்விகளை தமிழ்மணிக்கு தொடுத்திருந்தேன், கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன் என்ற பெயரில் எழுதியிருக்கும் தமிழ்மணி, அவரது கேள்விகளுக்கு நாம் அளித்த பதில்களையும், மறுப்புகளையும், நாம் தொடுத்த குற்றச்சாட்டுகளையும் புறக்கணித்திருப்பதால், தமிழ்மணி அவற்றை ஏற்றுக் கொண்டு தன்னை ‘பார்ப்பன’மணி யாக ஒத்துக்கொண்டிருக்கிறார் என்றுதான் நாம் பொருள்கொள்ள வேண்டும்.இங்கு அவரது கேள்விகளும் பதில்களும் வெவ்வேறு வண்ணத்தில் கொடுக்கப்பட்டிருப்பதோடு, அவரது பதில்கள் பற்றிய எனது குறிப்புகளையும் அதன் கீழே கொடுத்திருக்கிறேன். வாசகர்கள் படித்து 'பார்ப்பன'மணியை அடையாளங் கண்டு கொள்ளவும்.நமது கேள்வி: அனைத்து தமிழர்களுக்கும் கருவறையின் உள்ளே சென்று தனது மொழியில் வழிபட உரிமை இருக்கிறதா இல்லையா? இல்லை என்றால் ஏன்? இந்த போராட்டம் சரியா தவறா?தமிழ்மணி பதில் : நிச்சயம் உண்டு. இருக்கவேண்டும்.நமது குறிப்பு: நிச்சயம் உரிமை உண்டு, கருவறையின் உள்ளே சென்று தனது மொழியில் வழிபடும் உரிமை இருக்க வேண்டும் என்று மட்டும் கூறியிருக்கும் தமிழ்மணி இந்த போராட்டம் சரியா? தவறா? என்ற கேள்விக்கும் பதிலளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதோடு, தமிழ் வழிபாட்டுரிமையை மறுத்து அராஜகம் செய்துவரும் சிதம்பரம் தீட்சித ரெளடிகளை கண்டித்திருந்தால் இன்னும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். என்றோ வரப்போகும் கம்யூனிச வன்முறை குறித்து கவலைப்படும் தமிழ்மணி, இன்று நடந்து கொண்டிருக்கும் தீட்சிதர்களின் வன்முறை குறித்து கவலைப்படவேண்டாமோ?நமது கேள்வி: சிதம்பரம் கோவிலை ஏன் அரசுடைமையாக்கக்கூடாது?தமிழ்மணி பதில்: அரசுடமை ஆக்குவதும் ஆக்காததும், அந்தந்த அரசாங்கத்தையும் அந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தவர்களையும் பொறுத்தது. எத்தனையோ கோவில்களை அரசுடமையாக்கியிருக்கிறார்கள். சிதம்பரத்தை ஆக்கினால் என்ன?ஆனால், அரசுடமை என்ற பெயரில் திமுக அரசு செய்வது, செய்யக்கூடியது வேறு, கம்யூனிஸ்டுகளின் அரசுடமை கொள்கை வேறு. இதனை தனி பதிவாக எழுத முயற்சிக்கிறேன்.நமது குறிப்பு: அரசுடைமை ஆக்குவதும், ஆக்காததும் அந்தந்த அரசாங்கத்தையும், தேர்தெடுத்தவர்களையும் பொறுத்தது என்று இப்பொழுது எழுதும் திருவாளர் தமிழ்மணி(எ)’பார்ப்பன’மணி இரண்டுநாட்களுக்கு முன்பு என்ன எழுதினார் தெரியுமோ, இதோ பாருங்கள்//அதென்ன கோவிலை அரசுடைமையாக ஆக்குவது? அது காலம் காலமாக தனியார் கோவில். அதனை அவர்களே கட்டியிருக்கமாட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். எவனோ ராஜா அவர்களிடம் தாரை வார்த்தான் என்றே வைத்துக்கொள்வோம். அதற்கு என்ன இப்போது? இருந்துவிட்டு போகட்டுமே//"நேற்று தீட்சிதர்களிடமே இருந்துவிட்டு போகட்டுமே" என்று கருத்து சொல்லிவிட்டு இன்று "அது அந்த அரசாங்கத்தை பொறுத்தது" என்று பதில் சொல்கிறார் இந்த இரட்டை நாக்கு அம்பி. அதோடு "அரசுடைமை என்ற பெயரில் தி.மு.க அரசு செய்வது வேறு, கம்யூனிச அரசு செய்வது வேறு" என்ற தனது வழக்கமான கம்யூனிச எதிரிப்பு ஜல்லியையும் அவிழ்த்துவிடுகிறார் தமிழ்மணி.,அய்யா தமிழ்மணி இப்போது என்ன தமிழ்நாட்டில் கம்யூனிச அரசாங்கமா நடக்கிறது? தி.மு.க அரசாங்கம்தானே நடக்கிறது, இப்போது அரசுடைமையாக்குவதால் என்ன ஆபத்து வந்துவிடப்போகிறது, இதுவரை பல இலட்சம் பொருட்கள் அங்கிருக்கும் திருட்டு தீட்சிதர்களால் அபேஸ் செய்யப்பட்டிருக்கிறது மேலும் அந்த தீட்சிதர் கும்பல் இன்றைய நிலையில் பெரிய வன்முறை கூட்டமாக இருக்கிறது, இப்படியிருக்கும் பொழுது அந்த கோவிலை காப்பாற்ற வேண்டுமானால் அரசுடைமையாக்குவது அவசியமல்லவா? நாளை பக்தி செலுத்துபவர்கள் மீது கம்யூனிஸ்ட்கள் வன்முறையை ஏவிவிடுவார்கள் என்று கவலை கொள்ளும் நீங்கள், பக்தி செலுத்தி இறைவனை பாடத்துடிக்கும் சிவனடியார் ஆறுமுகசாமி மீது வன்முறையை ஏவி கையை முறித்ததோடு அவரை கொல்லவும் சமயம் பார்த்துக்கொண்டிருக்கும் தீட்சிதர் கூட்டத்தை அல்லவா கண்டிக்க வேண்டும், இந்த வன்முறை கும்பலை நினைத்தல்லவா கவலை கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு என்றோ வரப்போகும் கம்யூனிச வன்முறை குறித்துமட்டும் நீங்கள் கவலை கொள்வதன் மர்மம் என்ன?நமது கேள்வி: கடவுள் பெயரை குறிப்பிடாத அந்த மிகச்சில சங்கத்தமிழ் பாடல்கள் எத்தனை?தமிழ்மணி பதில் : எனக்கு தெரியாது. ஆனால், திமுகவுக்கு கடவுள் பெயர் வராத தமிழ் பாடல்களே தமிழ் பாடல்கள், மற்றவையெல்லாம் அழிக்கப்படவேண்டும் என்று எந்த விதமான கருத்தும் இல்லை. ஆனால், கம்யூனிஸ்டுகள், வரலாற்றிலேயே கை வைப்பவர்கள். இதெல்லாம் பூர்ஷ்வா கலாச்சாரம் என்று அழித்தொழிப்பில் இறங்கியவர்கள். உதாரணமாக கலைஞர் தஞ்சை பல்கலைக்கழகத்தை தஞ்சை கோவில் பாணியில் வடிவமைத்திருக்கிறார். ஆனால், அது கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் பூர்ஷ்வா கலாச்சாரம் என்று இடிக்கப்படும். இதனையே சீன கம்யூனிஸ்டுகளும், போல்போட் கம்யூனிஸ்டுகளும் செய்தார்கள். அதனையே இவர்களும் செய்வார்கள்.நமது குறிப்பு: தெரியாமலேயே "கடவுள் பெயர் குறிப்பிடாத சங்கத்தமிழ்பாடல்கள் மிகச்சில" என்று எவ்வாறு கூறினீர்கள் தமிழ்மணி. கம்யூனிஸ்ட்கள் வரலாற்றிலேயே கைவைப்பவர்கள் என்று கவலை கொள்ளும் நீங்கள், 'அந்தணர் வரலாறு' என்ற பெயரில் புத்தகம் எழுதி, ஆரியர்கள் இந்த நாட்டின் பூர்வகுடிகள் என்று வரலாற்றையே இன்று திரித்து எழுதிக்கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் கும்பலை கண்டிக்காமல் என்றோ வந்து கம்யூனிஸ்ட்கள் திருத்திவிடுவார்கள் என்று கவலை கொள்வது ஏன்? அந்த பார்ப்பன கும்பலும், சிதம்பரம் தீட்சித பொறுக்கி கும்பலும் நெருங்கிய தொடர்பு கொண்டவைதானே, NCERT புத்தகங்களில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பல் கைவைத்து திருத்தியதைவிடவா, கம்யூனிஸ்ட்கள் செய்துவிடப்போகிறார்கள்? இன்றும் இந்துத்துவவாதிகள் நடத்திக்கொண்டிருக்கும் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்கு அ-என்றால் அயோத்தி, ஆ-என்றால் ஆரியன் என்றும் கூட சொல்லித்தரப்படுகிறதுதானே. இன்றைய நிலையில் தொடரும் இந்த பாசிச அட்டூழியங்களை கண்டிக்க வக்கில்லாத நீங்கள் என்றோ வரப்போகும் கம்யூனிசம் குறித்து பதைப்பது ஏன்?மேலும் “கம்யூனிஸ்ட்கள் வந்து தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தை இடித்துவிடுவார்கள்” என்ற உங்கள் பூச்சாண்டி இருக்கட்டும், முதலில் அந்த பல்கலை கழகம் பெரிய கோவில் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று ஆதாரமில்லாமல் எப்படி உங்களால் புளுகமுடிகிறது.,தமிழறிஞர்கள் அமருகின்ற இடமாதலால் அந்த பல்கலைகழகம் ஒரு அரண்மனையின் தோற்றத்தில் கோட்டை போன்று வடிவமைக்கப்பட்டது, அதற்கு மைசூர் அரண்மனையை மாதிரியாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள், மேலும் அங்கிருக்கும் பெரிய நூலகம் பாராளூமன்ற வடிவத்தில் வட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது, இதனை நான் அந்த பல்கலை கழகத்திற்கு சென்று பார்த்தவன் என்ற முறையிலும், அங்கிருக்கும் நூலகத்தில் படித்தவன், ஊழியர்களோடு உரையாடியவன் என்கிற முறையிலும் கூறுகிறேன், அந்த பல்கலை கழகத்தின் வெளியே சோழர் காலத்தை நினைவுபடுத்தும் வகையில் புலி சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன, நல்ல வேளையாக அது அய்யப்பனின் வாகனம் அதனால் பொறித்து வைத்திருக்கிறார்கள் என்று கதையளக்காமல் இருந்தீர்களே, அதுவரையில் மகிழ்ச்சி!!நீங்கள் எந்த அடிப்படையில் அதனை கோவில் வடிவில் கட்டப்பட்டிருக்கிறது என்று கூறினீர்கள் அது கோபுரம் போன்ற வடிவத்தை மேலே கொண்டிருக்கிறது என்பதாலா? மன்னர் காலத்து கோட்டைகள் எப்படி இருந்தது என்று உங்களால் கூறமுடியுமா தமிழ்மணி, சிலப்பதிகாரத்தை படித்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள் விவரம் புரியும், மன்னர் காலத்து அரண்மனைகளும் கூட கோபுரம் போன்ற வடிவில்தான் கட்டப்பட்டன, இன்னும் சொல்லப்போனால் அந்த கோபுரங்களும் கூட திராவிட முறையிலான அமைப்பு என்று சொல்லப்படுகிறது, இங்கிருக்கும் கோபுரங்களும், வடநாடுகளில் இருக்கும் கோபுரங்களும் வடிவத்தில் ஒத்திருப்பதில்லை, அதற்கு காரணம் நான் முன்பே கூறியது போல இங்கிருக்கும் கோபுரங்கள் திராவிட முறைப்படி கட்டப்பட்டவை என்பதுதான், இது குறித்து ஒரு கட்டடகலை மாணவரை நான் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் இங்கிருக்கும் கட்டடங்கள் நான்கு வகையில் பகுக்கப்படுவதாக கூறினார், திராவிடம், வேசரம், நாகரம் என்று அவற்றின் மூன்று வகைகளின் பெயரை குறிப்பிட்டதோடு தூக்கம் கலையாமலிருந்த காரணத்தால் அந்த இன்னொரு வகையை புத்தகத்தை பார்த்து பிறகு கூறுவதாக கூறிச்சென்றார்.ஆக இங்கிருக்கும் கட்டடங்கள் எல்லாம் இப்படி கட்டப்பட்டிருக்கும் பொழுது அது கோவில் வடிவில் கட்டப்பட்டதாக கூசாமல் வரலாற்றை புரட்டி, வரலாற்றிலேயே கைவைக்கிறீர்களே தமிழ்மணி, கம்யூனிஸ்ட்கள் வந்தால் வரலாற்றில் கைவைத்துவிடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டே தமிழ் பல்கலை கழகத்தின் வரலாற்றையே புரட்டுகிறீர்களே தமிழ்மணி உங்களுக்கு வெட்கமாக இல்லையா? தெரியாமல் கூறினதாக எடுத்துக்கொண்டாலும், எதுவும் தெரியாமலேயே இவ்வளவு ஆணித்தரமாக பேசுகிறீர்களே, அதுவும் கண்ணுக்கு முன்னால் தெரியும் ஒரு கட்டட அமைப்ப்பு விசயத்திலேயே புரளி கிளப்பி புளுகும் நீங்கள், கண்ணுக்கே தெரியாத தூரதேசத்தில் கம்யூனிஸ்ட்களால் நிகழ்த்தப்பட்ட கொலைகள் பற்றி தினம் தினம் கதையளக்கிறீர்களே அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும்.நமது கேள்வி: ராமனையும் கிருஷ்ணனையும் வசைமாறி பொழிவது தவறா?தமிழ்மணி பதில்: மனிதர்களது கருத்துரிமையை எப்போதுமே நாம் உரத்த குரலெடுத்து காப்பாற்றவேண்டும். ராமனை கிருஷ்ணனை வசை மாறி பொழிவதற்கு தற்போது இருக்கும் உரிமை போலவே, கம்யூனிஸ்டுகளின் சாம்ராஜ்யத்தில் லெனின், மாவோ, போல்போட், ஸ்டாலின், மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோர் மீது வசை மாறி பொழிவதற்கு சுதந்திரம் வேண்டும். அது இருக்காது என்பதாலேதானெ நான் கம்யூனிஸ்டுகளை எதிர்க்கிறேன்? இந்த சுதந்திரம், கம்யூனிஸ்ட்கள் அமைக்கப்போகும் புரட்சி நாட்டில் இருக்குமா என்பதை அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். அப்படி குரலெடுத்து வசை மாறி பொழிபவர்களை எப்படி நடத்துவார்கள் என்பதையும் கேட்டுச் சொல்லுங்கள்.நமது குறிப்பு: மக்களது கருத்துரிமையை காப்பாற்றத்துடிக்கும் உங்களது ஜனநாயக பண்பை நினைத்தால் அப்படியே புல்லரித்து போகிறது தமிழ்மணி, உண்மையில் நீங்கள் கருத்துரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இன்றைய நிலையில் இராமனையும், கிருஷ்ணனையும் விமர்சிப்பவர்களுக்காகத்தான் குரல் கொடுக்க வேண்டும்.,"இராமன் ஒரு குடிகாரன்" என்று வால்மீகி இராமயணத்தில் இருக்கும் ஒரு உண்மையை கூறிய காரணத்திற்காக இங்கிருக்கும் ஒரு முதல்வரின் தலையே விலை பேசப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் இன்று இந்தியாவில் இருக்கும் கருத்துரிமையின் இலட்சனத்தை., மேலும் இன்றைய நிலையில் இந்தியாவில் இராமனை தேசிய நாயகனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் முஸ்லீம்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படுகிறார்கள், முஸ்லீமகள் இராமனை ஏற்றுக்கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், ஆகவே திருவாளர் தமிழ்மணி அவர்களே கம்யூனிச ஆட்சி வந்து அதில் ஸ்டாலின், லெனின், மாவோ குறித்து விமர்சிக்க கருத்துரிமை கேட்டு இன்று போராடுவதை காட்டிலும் இராமனையும், கிருஷ்ணனையும் விமர்சிக்கவும் அந்த பார்ப்பன கடவுளர்களை பற்றி உண்மைகளை எடுத்துச் சொல்லவும் கூடிய நாத்திகர்களின் கருத்துரிமைக்காகவும், தனது கடவுளை நம்ப வாய்ப்பளிக்கிற முஸ்லீம்களின் சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுங்கள்., இப்படி விமர்சிப்பவர்களையும், வணங்குபவர்களையும் இன்று ஆர்.எஸ்.எஸ்காரர்கள் எப்படி நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எனக்கு கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்.நமது கேள்வி: நீங்கள் தன்மான தந்தை, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை ஏற்றுக் கொள்கிறீர்களா இல்லை? ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் எந்த வகையில்? மறுக்கிறீர்கள் என்றால் எந்த வகையில்?தமிழ்மணி பதில் : ஏன் மறுக்கவோ ஏற்றுக்கொள்ளவோ வேண்டும்? எல்லோருக்கும் அவரும் நாமும் இணையும் புள்ளிகள் ஏராளம் இருக்கும். அவரும் நாமும் பிரியும் புள்ளிகளும் ஏராளம் இருக்கும். அதுதானே ஒவ்வொருவரின் தனி இருப்பை அடையாளப்படுத்துகிறது? (பிரியும் புள்ளிகளை விட இணையும் புள்ளிகள் ஏராளம் என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்)நமது குறிப்பு: தமிழ்மணி இது போன்ற பூடகமான பதில்கள் தேவையில்லை, நேரடியாக பேசுங்கள்? உங்களிடம் கேட்பது என்னவென்றால், பெரியாரை பற்றிய உங்கள் விமர்சணங்கள் என்ன என்பதுதான்? அதாவது பிரியும் அந்த சில புள்ளிகள் என்ன என்பதுதான் எனது கேள்வி. நேற்று எழுதிய பதிவுகளில் ஈ.வெ.இராமசாமி என்று ஆர்.எஸ்.எஸ்காரர்கள் போல வன்மம் தெரிக்க எழுதிய நீங்கள், எங்களின் விடியலுக்கு திசை காட்டிய அந்த கிழவனை பற்றி என்ன விமர்சணம் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன், சொல்லுங்கள்., பெரியார் வீட்டில் கன்னடம் பேசினார் என்று அபத்தங்களை அவிழ்த்துவிடும் அயோக்கிய சிகாமனியாகிய நீங்கள் எங்கள் பகுத்தறிவு பகலவனை பற்றி என்ன குறை சொல்லப்போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளவே கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்.
Posted by சம்பூகன் at 7:47 PM
19 comments:
Sathiyanarayanan said...
அருமை நண்பரே,அருமையான பதிவுக்கு நன்றிஉங்களது பணித் தொடரட்டும்வாழ்த்துக்கள் தோழரே
January 30, 2008 8:22 PM
Anonymous said...
தமிழ்மணி என்பது பாப்பான் + பாப்பான் அடிவருடிக் கூட்டங்களின் கூட்டுப் பதிவு!
January 30, 2008 8:44 PM
சம்பூகன் said...
வருகைக்கும் உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி சத்தியநாராயணன், இங்கு வருகை தந்து பதிவினை படிக்கும் வாசகர்கள் உங்களது கருத்துக்களை பதிந்தால், நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்.
January 30, 2008 9:05 PM
Anonymous said...
பார்ப்பன சதியை புட்டு புட்டு வைக்கும் நன்பர் சம்பூகனுக்கு பாராட்டுகள்.நட்பு சக்திகளுக்குள் சிண்டு முடியும் வேலையில் இறங்கியிருக்கும் தமிழ்மணி பதிவை மிகச்சிறப்பான முறையில் தோலுரித்துக் காட்டி வரும் சக தோழருக்கு மனமார்ந்த நன்றிகள் பல.நீங்கள் “கருங்குயில்” கவிதைத் தொகுப்பை எழுதிய தோழர் சம்பூகன் என்றால்..எங்கள் ஊருக்கு வரும் போது தெரியப்படுத்தவும். உங்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறோம்இராவணன்,கலைஞர் பகுத்தறிவு பாசறைமதுராந்தகம்.பி.கு - எனது முதல் தமிழ் தட்டச்சு முயற்சி இது. எழுத்துப் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்
January 30, 2008 9:15 PM
லக்கிலுக் said...
தமிழ்மணி என்பவரது ஆரம்ப பதிவுகளை யார் கண்டிருந்தாலும் அவர் ஒரு திராவிட பதிவர் என்று தவறாக புரிந்துகொண்டிருப்பார்கள்.பார்ப்பன முகமூடியை சரியான நேரத்தில் கிழித்தெறிந்து உண்மையை வெளிக்காட்டிய சம்பூகனுக்கு நன்றி!
January 30, 2008 9:16 PM
சம்பூகன் said...
நண்பர்களே தமிழ்மணியின் பதிவுகளில், பழைய அனானி என்று பெயரிட்டுக்கொண்டு ஒருவர் தொடர்ந்து பின்னூட்டமிட்டு எழுதி வருகிறார், அவர் உண்மையிலேயே பழைய்யயய அனானிதான் போலத்தான் தெரிகிறது, வைக்கம் போராட்டத்தின் பொழுது தந்தை பெரியார் நாத்திகரா என்று கேள்வி எழுப்பியிருப்பதோடு, ஒரு ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறியனுக்கே உரிய வன்மத்தோடு சம்பந்தமேயில்லாமல் முஸ்லீம் மதத்தின் மீதும், கிறிஸ்தவ மதத்தின் மீது விழுந்து பிராண்டியிருப்பதோடு இந்து மதம் ஒரு ஜனநாயக மதம் என்று ஒரு பச்சைபொய்யை வேறு உதிர்த்து சென்றிருக்கிறார்.வைக்கம் போராட்டத்தின் போது பெரியார் நாத்திகரா என்று அவர் எழுப்பியிருக்கும் சந்தேகத்திற்கான விளக்கத்தை பார்ப்போம்.பழைய அனானி கூறுவது போலவே காங்கிரசின் பிரதிநிதியாகத்தான் தந்தை பெரியார் அந்த போராட்டத்திற்கு தலைமை ஏற்றார், அந்த போராட்டத்தில் ஈடுபட்ட 19 தலைவர்களும் கைதாகி வைக்கம் போராட்டம் தொய்வடைந்திருந்த நிலையில், தந்தை பெரியாருக்கு தலைமையேற்கும்படி கடிதம் எழுதப்பட்டது. பண்ணைபுரத்தில் பொதுக்கூட்டம் பேசிவிட்டு ஈரோடு வந்த தந்தை பெரியார் உடனே வைக்கம் புறப்பட்டுச் சென்றார், போராட்டத்தில் ஈடுபட்டு சிறையும் சென்றார். காங்கிரஸின் பிரதிநிதியாகவே அங்கு சென்றிருந்த தந்தை பெரியார் அங்கு காங்கிரஸ் பிரதிநிதியாக மட்டும் செயல்படவில்லை மாறாக இந்துமதத்தின் கொடுங்கரத்தால் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சூத்திர பஞ்சமர்களின் பிரதிநிதியாகவே போர்குணத்தோடு அந்த போராட்டத்திற்கு பெரியார் தலைமை கொண்டார், அதன் காரணமாகத்தான் காங்கிரஸ் தலைமையிலிருந்த காந்தி, இராஜாஜி, சீனிவாச அய்யங்கார் போன்றவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்தும் கூட பெரியார் தொடர்ந்து போராடினார். மேலும் இந்த போராட்டத்தில் கைதாகி பெரியார் சிறையிலிருந்த பொழுது அவர் இறந்து போக வேண்டும் என்பதற்காக சத்ரு சம்ஹார யாகம் என்றவொரு யாகத்தை, பார்ப்பன நம்பூதிரி கும்பல் நடத்தியது, ஆனால் யாகத்தின் முடிவில் மகாராஜா இறந்துவிட்டார், பெரியாரை கொல்ல அனுப்பப்பட்ட பூதம் திரும்பிசென்று மகாராஜாவையே கொலை செய்துவிட்டது என்று சிறையிலிருந்த ஒரு காவலர் பெரியாருக்கு முன்னாலேயே கூறி மகிழ்ந்த பொழுது தந்தை பெரியார் அதனை ஒரு மூடநம்பிக்கை என்று கண்டித்தார். இந்த சம்பவத்தை சமீபத்தில் வந்த 'பெரியார்' படத்தில் கூட காட்டியிருப்பார்கள். இந்த ஒரு சம்பவம் போதுமானது பெரியார் அப்போது ஆத்திகராக இருந்தாரா? அல்லது நாத்திகராக இருந்தாரா? என்பதை புரிந்து கொள்வதற்கு. மேலும் மதுரை கோவில் நுழைவு போராட்டத்தில் பெரியார் பங்கேற்கவில்லை என்றும் கூட பழைய அனானி கூறியிருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோவில் நுழைவு போராட்டம் என்பதே நடக்கவில்லை என்பதை அப்பொழுதே விடுதலை பத்திரிக்கையில் அம்பலப்படுத்தினார் தந்தை பெரியார்.பழைய அனானி இங்கு மதுரை கோவில் நுழைவு என்று குறிப்பிடுவது, திணமனியில் பேட்டியளித்த இல.கணேசன் என்ற ஒரு இந்துத்துவ வெறியனும், புதிய பார்வை என்ற தேவர் ஜாதிவெறி பத்திரிக்கையும் எழுதிய கருத்துக்களை அடியொற்றி கூறப்படுவது. அதாவது தேவர்(முத்துராமலிங்க தேவர்) ஜாதியினரும், பார்ப்பனர்களும்(வைத்தியநாத அய்யர்) இணைந்துதான் கோவில் நுழைவு போராட்டங்களை நடத்தினர் என்பதுதான் அந்த கருத்து. இந்த புளுகுமூட்டைக்கு எதிராக 'வாலாச வல்லவன்' என்ற பெரியாரிய தொண்டர் ஒருவர் 'தலித் முரசு' என்ற பத்திரிக்கையில் அப்பொழுதே ஒரு மறுப்பு கட்டுரை எழுதியிருந்தார். தற்பொழுது "கோவில் நுழைவில் திராவிட இயக்கத்தினரின் பங்கு" என்ற ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். புளுகு மூட்டைகளை தூக்கி சுமந்து கொண்டு திரியும் பழைய்ய்யய அனானி இந்த புத்தகத்தை வாங்கி படித்து பார்க்கலாம்., அந்த பின்னூட்டத்தில் தந்தை பெரியார் பற்றி இப்படி நுட்பமாக புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருக்கும் பழைய அனானி போதாக்குறைக்கு கம்யூனிஸ்ட்கள் மீதும் தனது வெறுப்பை கக்கிவைத்திருக்கிறார், எவனோ சிவப்பு சட்டைக்காரன், பழைய அனானி டவுசரை நன்றாக கிழித்துவிட்டு துரத்தியிருப்பான் போல... பாவம்...
January 30, 2008 11:05 PM
சம்பூகன் said...
உங்களது பாராட்டுக்கு நன்றி லக்கி லுக், தமிழ்மணி என்ற பெயரில் எழுதும் பார்ப்பன போலியை பற்றி நன்றாக புரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்..
January 30, 2008 11:07 PM
சம்பூகன் said...
கலைஞர் பகுத்தறிவு பாசறையை சேர்ந்த நண்பர் இராவணனின் வருகைக்குக்கும் பாராட்டுகளுக்கு நன்றி.தோழர், நீங்கள் குறிப்பிடுகின்ற சம்பூகன் நான் இல்லை.,
January 30, 2008 11:10 PM
Anonymous said...
சிதம்பரம் நடராசர் கோயில் விவகாரங்களில் அரசு தலையிட முயன்று நீதிமன்றத்தில்தோற்றுவிட்டது.வழக்கு இன்னும்முடியவில்லை. இதை நினவில்கொள்வது நல்லது. ஆகம விதிகள்படி கருவரையில்நுழையும் உரிமை பூசை செய்பவர்களுக்கே உள்ளது.பல கோயில்களில் பார்ப்பனர் அல்லாதோரும் பூசகர்கள்.இங்கு பார்பனர் கருவரையில் நுழையமுடியாது.பார்பனர் பூசகராக இருந்தாலும் பூசகர் மட்டுமேசெல்ல முடியும், அனைத்துபார்ப்பனருக்கும் அந்த உரிமைஇல்லை. மத வழிபாட்டு உரிமைஅரசியல் சட்டம் தருவது. அதில்அத்துமீறி நுழைய அரசுக்கு அதிகாரம்இல்லை.மசூதிகளில் தமிழில் வழிபாடு இல்லையே, ஏன். மசூதிகளில்தமிழிலும் வழிபாடு வேண்டும்என்று நீங்கள் கோருவீர்களா.எப்படி தேவாலயங்கள் கிறித்துவர்களிடமும், மசூதிகள்இஸ்லாமியரிடமும் இருக்கின்றனவோஅது போல்இந்துக் கோயில்கள் இந்துக்களிடம்இருக்க வேண்டும், அரசிடம் அல்ல.இதுதான் தீர்வு. இந்து சமூகம் இதைஇன்னும் உணரவில்லை.
January 31, 2008 2:07 AM
அசுரன் said...
//தமிழ்மணி என்பது பாப்பான் + பாப்பான் அடிவருடிக் கூட்டங்களின் கூட்டுப் பதிவு!//வாழ்த்துக்கள் சாம்பூகன். கம்யுனிசம் குறித்த உங்களது கருத்துக்களை ஏன் எம்முடன் விவாதித்து புரிந்து கொள்ளக் கூடாது? உங்களது விமர்சனங்களை எனக்கு கடிதம் அனுப்புங்கள் asuran@inbox.com. சமிபத்தில்தான் திருவினுடைய ஒரு பின்னூட்டத்திற்க்கு பதிலளிக்கும் போது பார்ப்பன் எதிர்ப்பாளர்களிடையே சரியான உரையாடல் இல்லாதது ஒரு பிரச்சினையாக இருப்பதை சுட்டிக் காட்டினேன். இதில் யார் பக்கம் தவறு என்று எதுவும் நான் குறிப்பிட்டு பேசவில்லை. ஏன் நாம் இந்த அம்சத்தில் உரையாட்க் கூடாது? உங்களது இமெயில் ஐடியை எனது தளத்தில் உங்களது ப்ளாக்கர் ஐடி மூலமாக வந்து கொடுத்துச் செல்லுங்கள். ஏனேனில் தமிழ்மணி கும்பல் உங்களது பெயரில் என்னுடன் உரையாடும் வாய்ப்பு 99% உள்ளது. உங்களது கருத்துக்களை அறிய ஆவலுடன்,அசுரன்
January 31, 2008 4:16 AM
அசுரன் said...
தமிழ்மணீ ஒரு பார்ப்ப்னிய பதர் என்பத்ற்க்கு பதிவுல தோழர்கள் ஆதாரங்கள் இருப்பதாக கூறீனர். ஆயினும் அப்பொழுது அசுரன் தளத்தில் தமிழ்மணியின் அல்பத்தனத்தை விளம்பரப்படுத்தும் முயற்சி நடந்து கொண்டிருந்ததால் அந்த அம்சத்தில் தமிழ்மணி கும்பலை அவதனிப்பது(for sometime) என்று முடிவு செய்தோம். அப்பொழுதே அசுரன் தளத்தில் கிருத்துவ ஏகாதிபத்தியம் போன்ற RSS கும்பலுக்கே உரிய வசனங்களை உதிர்த்துச் சென்றான் இந்த பார்ப்பனமணி(இந்த கும்பலில் நீலகண்டன் போன்றவர்களும் இருக்கலாம்). But u did the job at right time... with right spirit.நண்பர் லக்கிலுக்,தமிழ்மனியின் ஆரம்ப கால எழ்த்துக்களை வாசித்தால் கூட அவனது கள்ளாத்தனத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்(அவன் பார்ப்பன பயங்கரவாதி என்று சொல்ல முடியாது எனினும் அவன் ஒரு மிதவாத இந்துத்துவவாதி என்று சொல்லிவிடக் கூடிய அளவில்தான் அவனது ஆரம்ப கால எழுத்துக்கள் உள்ளன). நமது பிரச்சினை நாம் விசயங்களை வேக வேகமாக பரவசமாக உள்வாங்குவதுதான். கொஞ்சம் நிதானித்து யார் எழுதுகிறார் எதற்க்கு எழுதுகிறார், வார்த்தைகளுக்கிடையிலுள்ள அர்த்த இடைவெளி என்ன்? எதை பேசமால கள்ளமௌனம் சாதிக்கீறார் என்று கொஞ்சம் நிதானமாக பார்த்தால் பெரும்பாலன நேரங்களில் எதிரி அம்பலமாகிப் போய்விடுவான். ;-)அசுரன்
January 31, 2008 4:24 AM
அசுரன் said...
//இந்து சமூகம் இதைஇன்னும் உணரவில்லை.//சிதம்பரம் கோயில் ஏற்கனவே தீட்சிதர் கையில் இருக்கிறது. அப்படியெனில் அது இந்துக்கள் கையில் இல்லையா? சரி யார் இந்த் இந்து? இவர்கள் கணக்கில் தீட்சிதர் தவிர யாரும் உள்ளே போக முடியாது எனில் இவர் சொல்லும் இந்து பார்ப்பந்தான். அடித்து துவைக்கப்பட்ட ஆறுமுகச்சாமி என்னும் சூத்திரன் ஒரு இந்து கிடையாது என்று ஒத்துக் கொண்ட அனானிக்கு நன்றிகள்.//மத வழிபாட்டு உரிமைஅரசியல் சட்டம் தருவது. //மத வழிபாட்டு உரிமை சரி. பார்ப்பன வெறியர்கள் பேசுவது சாதி வழிபாட்டு உரிமையல்லவா? இந்து மதம் எனப்படும் பார்ப்பனிய ஒடுக்குமூறை வாழ்க்கை தத்துவம் ஒரு மதமல்ல என்று இந்த அம்சத்தில்தான் சொல்கிறோம்.//சிதம்பரம் நடராசர் கோயில் விவகாரங்களில் அரசு தலையிட முயன்று நீதிமன்றத்தில்தோற்றுவிட்டது.//பொய், இந்த அம்சத்தில் 1800களிலிருந்து இன்று வரை நடந்த வழ்க்கு நிலவரங்கள் வேண்டுமானால் தருகிறேன். முதல் வழக்கிலேயே அந்த கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல என்பதுதான் தீர்ப்பு, மாறாக தீட்சிதர்களின் வருவாய் கோயிலை நம்பி இருக்கீர்து என்ற அம்சத்தில்தான் அவர்களுக்கு பாதி சாதகமான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.
January 31, 2008 5:11 AM
சம்பூகன் said...
இங்கு வருகைதந்து வாழ்த்தியிருப்பதோடு வாய்கொழுப்பெடுத்த ஒரு அனானிக்கு பதிலையும் கூறியிருக்கும் நண்பர் அசுரனுக்கு எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.தமிழ்மணி என்ற வலைப்பூ "பார்ப்பனர் + பார்ப்பன அடிவருடிகள்" இணைந்து நிர்வகிக்கும் ஒரு கூட்டுப்பதிவு என்பதனை பலர் இங்கு கூறியிருகிறார்கள், அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, கடந்த ஒரு வாரமாக நான் பார்த்து தமிழ்மணியின் வலைப்பூவை படித்த வகையில், ஜெர்மனியில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் தமிழ்மணியிடமிருந்து இரவில் பதிவு வருவதும், மதிய நேரங்களில் பின்னூட்டம் வருவதுமாக அது 24 மணிநேரமும் இயக்கத்திலேயே இருப்பதால் ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ என்று எண்ண வாய்ப்பு இருக்கிறது. ஆனால் 'தமிழ்மணி' என்று நயவஞ்சகமாக பெயரிட்டுக்கொண்டிருப்பது ஒரு பார்ப்பன தந்திரம்தான் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை அதனைத்தான் அவரது கருத்துக்களிலிருந்தும் நிலைப்பாடுகளிலிருந்தும் இங்கு அம்பலப்படுத்தியிருக்கிறேன். பார்ப்பனர்கள் தனிதனியாக இயங்கினாலும் கூட அவர்கள் கட்டுக்கோப்பானவர்கள் என்பதும், ஒருவகையில் கருத்தியல் ரீதியாக அவர்கள் கூட்டுப்பதிவர்கள்தான் என்பதும் வெள்ளிடைமலை, இந்த நிலையில் நான் தனியாக நின்று அவர்களுக்கு பதிலளிப்பதை காட்டிலும், நண்பர்களூம், தோழர்களும் இதில் பங்கெடுத்துக் கொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும். பார்ப்பனர்கள் இதற்கு முன்பு சல்மா அயூப், முரளி மனோகர் என்ற பல்வேறு பெயர்களிலும் எழுதி கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார்கள் என்று ஒரு நண்பர் தனிமடலில் தெரிவித்து இருக்கிறார், தமிழ்மணி என்று தமிழை தனது அடைமொழியாக்கி கொண்டு சதியில் இறங்க முற்பட்டிருந்த பார்ப்பனர்கள் தங்கள் கருத்துக்களின் வாயிலாக இப்போது அம்பலமாகியிருக்கும் நிலையில்,இது போன்று பல்வேறு பெயர்களில் எழுதமுற்பட்டு இணையத்தின் பார்ப்பனர்கள் அம்பலமான வரலாற்றினை சுருக்கமாக மூத்த பதிவர்கள் யாராவது எழுத முற்பட்டால் என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு உதவியாய் இருப்பதோடு, பார்ப்பனர்களின் இந்த தொடர் முயற்சியை பலர் புரிந்து கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும் நண்பர் லக்கி லுக் போன்ற மூத்த பதிவர்களால் அது இயலும் என்கிற காரணத்தால் இதனை அவருக்கு எனது வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.
January 31, 2008 7:20 AM
தமிழரங்கம் said...
ஒரு பார்ப்பனிய முகத்திரை கிழிய போராடும் சம்பகனுக்கு தோமையுடன் கூடிய வாழ்த்துகள். அவனை விடு, இவனை விடு என்று சொல்லும், நீ யார்? நீ பாhப்பான் என்றால், கோயில் உன்னுடையதா? வழிபடும் உரிமை, வழிபடதா உரிமை தனிமனிதனுடையது. இதற்கு அப்பால் இதைச் சொல்லி, கடவுளின் பெயரால் தின்னும் கூட்டத்துக்குரியதல்ல. ஒரு மனினதனாக உழைத்து தின்ன மறுக்கும் பாhப்பான், கடவுளின் பெயரல் தின்னுவதை உரிமை என்கின்றான். கோயிலுக்குள் செல்லக் கூட உரிமை கிடையாது. உரிமை பற்றி பேசுகின்றனர்.
January 31, 2008 7:50 AM
சம்பூகன் said...
அசுரன், நமக்கு இடையில் இருக்கும் முரண்பாடும், விமர்சணமும் எப்படி இந்த இந்துத்துவ பார்ப்பன சமூகத்தை மாற்றியமைப்பது, சாதியை ஒழிப்பது, மூடநம்பிக்கைகளை ஒழித்து ஒரு முற்போக்கான சமூகத்தை படைப்பது போன்ற முற்போக்கான அம்சங்களை அடிப்படையாக் கொண்டது, தமிழ்மணி என்ற பெயரில் எழுதுகின்ற பார்ப்பன சநாதனிகளுடன் நாம் கொண்டிருக்கும் விமர்சணமும் முரண்பாடும் அடிப்படையிலேயே வேறானது, அவர்கள் நாம் எந்த மாற்றத்தையும் செய்து இந்த பார்ப்பனீய சமூகத்தை மாற்றிவிடக்கூடாது என்று இயங்குகிறார்கள், அதற்காகவே கம்யூனிஸ்ட்களையும் பெரியாரியவாதிகளையும் மோதவிட்டு ஆதாயம் அடைய துடிக்கிறார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் "ஆயுதப் பயிற்சி எடுக்கும் ஆர்.எஸ்.எஸ்." என்ற தலைப்பில் நீங்கள் போட்டிருக்கும் பதிவை இப்பொழுது பார்த்தேன், ஒரு சிறுவனுக்கு காக்கி டவுசர், குல்லாவை மாட்டிவிட்டு, அவனது கையில் துப்பாக்கியை கொடுத்து ஆயுதப்பயிற்சி கொடுக்கும் ஒரு அதிர்ச்சியான புகைப்படம் அதில் வெளியிட்டிருக்கிறீர்கள், பிஞ்சுகளின் கரத்தில் துப்பாக்கியை கொடுத்து, முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைய தூண்டும் இந்த காட்சியை பார்த்தாலே நெஞ்சு பதைக்கிறது, இப்படி பயிற்சி எடுத்த வன்முறை கும்பல்தான் சமீபத்தில் ஒரிசாவிலும், சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்திலும் பல்லாயிரக்கணக்கில் இந்திய மக்களான முஸ்லீம் சகோதரர்களை கொன்று குவித்திருக்கிறது. இப்படி வன்முறை, பொறுக்கி கும்பலாக வளர்ந்து நிற்க்கும் இந்த ஆரிய இந்துமத வெறி ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்ட்களை கண்டித்து இதுவரை ஒரு பதிவு கூட எழுதாத தமிழ்மணி, கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்து வன்முறையை கட்டவிழ்த்துவிடுவார்களோ என்று கண்ணீர்விடுவதை பார்க்கும் பொழுது அதன் உள்நோக்கத்தையும் அதற்கு பின்னே இருக்கும் நரித்தனத்தையும் என்னால் தெளிவாக புரிந்து கொள்ளமுடிகிறது, மேலும் தந்தை பெரியாரை இவர்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது என்றால் அவர் ஜனநாயகவாதியாம், வன்முறையின் மீது நம்பிக்கையில்லாது இருந்தவராம் ஆனால் கம்யூனிஸ்ட்கள் வன்முறையின் மீது பற்றுகொண்டவர்களாம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களாம், அதனால் அவர்களை எதிர்க்கிறேன் என்று கூறுகிறார் தமிழ்மணி.அப்படியானால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் கையில் துப்பாக்கியோடு திரியும் இந்த ஆர்.எஸ்.எஸ் வன்முறை கும்பலை ஏன் தமிழ்மணி கண்டிக்கவில்லை என்ற கேள்வியல்லவா எழுகிறது, ஆக இந்த ஜனநாயகம் என்ற பேச்சல்லாம் வெறும் முகமூடிதான், கம்யூனிஸ்ட்களை எதிர்ப்பது என்ற போர்வையில் இந்துத்துவ வெறியர்களின் வன்முறைக்கு கருத்தியல் ரீதியாக ஆதரவு அளிப்பதுதான் தமிழ்மணியின் நிலைப்பாடு.இப்படியாக அந்த 'பார்ப்பன'மணியின் நரித்தனங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இதையெல்லாம் நான் ஏன் கூறுகிறேன் என்றால் முற்போக்கு முகாமிலிருக்கும் கம்யூனிஸ்ட்களும், பெரியாரியவாதிகளும் முட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் தமிழ்மணி என்ற பெயரில் இயங்கும் பார்ப்பனரின் பதிவுகளிலிருந்து தெளிவாக வெளிப்படுகிறது, தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணி முற்போக்காளர்கள் அனைவருக்கும் பொது எதிரியாக இருக்கிறார். இதனை நாம் முறியடிக்க வேண்டுமானால், இப்பொழுதைய நிலையில் நமக்கிடையே இருக்கும் பிரச்சணைகளையும், விமர்சணங்களையும் விவாதிப்பதை விடுத்து தமிழ்மணியை அம்பலப்படுத்துவதோடு, பார்ப்பனீயத்தை பற்றியும் அதன் சதி வேலைகள் பற்றியும் விரிவாக எழுதவேண்டும்., மற்றபடி கம்யூனிசம் குறித்த எனது சந்தேகங்களையும், கம்யூனிச அமைப்புகள் பற்றி எனக்கிருக்கும் விமர்சணங்கள் பற்றியும் இன்னும் இரண்டொரு நாளில் உங்களுக்கு தனிமடலில் தெரிவிக்கிறேன்.//சமிபத்தில்தான் திருவினுடைய ஒரு பின்னூட்டத்திற்க்கு பதிலளிக்கும் போது பார்ப்பன் எதிர்ப்பாளர்களிடையே சரியான உரையாடல் இல்லாதது ஒரு பிரச்சினையாக இருப்பதை சுட்டிக் காட்டினேன். இதில் யார் பக்கம் தவறு என்று எதுவும் நான் குறிப்பிட்டு பேசவில்லை. //இதனை நான் முற்றிலுமாக ஏற்றுக்கொள்கிறேன் அசுரன், இந்த சமயத்தில் கூட பார்ப்பன பதிவாளர்களாக இயங்கும் பல நண்பர்கள் தமிழ்மணத்தில் யோனி குறித்து பதிவிட்டுக் கொண்டிருப்பது உண்மையிலேயே எனக்கு வருத்தமாக இருக்கிறது. சிதம்பரம் போராட்டத்தில் எப்படி கட்சி வேறுபாடுகளை கடந்து தமிழ் ஆர்வலர்களாகவும், பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவும் அனைவரும் கலந்து கொண்டனரோ அது போல இணையத்தில் பார்ப்பனர்கள் தமிழ்மணி போன்ற சதி செயல்களில் இறங்கியிருக்கும் சூழலில் பார்ப்பன எதிர்ப்பு பதிவர்களும் அனைத்து கட்சி வேறுபாடுகளையும், தனிப்பட்ட முரண்பாடுகளையும் கடந்து பார்ப்பன எதிர்ப்பு பதிவர்களாக எழுத வேண்டும் என்று எனக்கு ஆசையிருக்கிறது, இது பற்றி நான் வைத்திருக்கும் யோசனையை இன்னும் இரண்டொரு நாட்களில் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன்.//தமிழ்மணி கும்பல் உங்களது பெயரில் என்னுடன் உரையாடும் வாய்ப்பு 99% உள்ளது.//நூறுசதவீதம் இருப்பதாகவே நான் நம்புகிறேன், கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள் அசுரன், எனினும் எனது வேலைகள் முடிந்து ஓய்வாகும் நேரத்தில் உங்களை தனிமடலில் நான் தொடர்பு கொள்கிறேன்.//அப்பொழுதே அசுரன் தளத்தில் கிருத்துவ ஏகாதிபத்தியம் போன்ற RSS கும்பலுக்கே உரிய வசனங்களை உதிர்த்துச் சென்றான் இந்த பார்ப்பனமணி(இந்த கும்பலில் நீலகண்டன் போன்றவர்களும் இருக்கலாம்). //இது போன்ற கருத்துக்களை நானும் கவனித்தேன் அசுரன், இந்துத்துவ வெறியனான அரவிந்த நீலகண்டன் என்ற ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் தமிழ்மணத்தில் எழுதி வந்ததையும் அதற்கு பின்பு அவர் தமிழ்மணத்திலிருந்து விரட்டப்பட்ட விசயங்களையும் கூட தனிமடலில் ஒரு அனானி குறிப்பிட்டிருக்கிறார். கிறிஸ்தவ ஏகாதிபத்தியம் போன்ற சொற்களை ஆர்.எஸ்.எஸ் புத்தகங்களில்தான் நான் பார்த்திருக்கிறேன், வேறு எங்கும் கேட்டதில்லை., ஞானகங்கை என்ற கோல்வால்கரின் புத்தகத்தில் கூட இந்த சொற்றொடரை பார்த்த ஞாபகம், இதனையெல்லாம் வைத்துப்பார்க்கும் பொழுது இந்த சொற்றொடரை பயன்படுத்தும் தமிழ்மணி கும்பல் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஆரிய இந்து மதவெறி கும்பல் என்று என்ன வாய்ப்பு இருக்கிறது.கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக தமிழ்மணி என்ற பெயரில் எழுதப்படும் தமிழர் விரோத பார்ப்பன கருத்துக்களை அம்பலப்படுத்த போய், அது ஒரு கூட்டுப்பதிவு என்றும், அதில் ஆர்.எஸ்.எஸ் ஆரிய இந்துமத வெறியர்களும் இருக்கிறார்கள் என்ற செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பார்ப்பன எதிர்ப்பு பதிவர்கள் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய தருணம் இது, தமிழ்மணியின் அனைத்து பதிவுகளையும் படித்து இது போன்ற இந்துமதவெறி கொண்ட சொற்றொடர்களையும் கருத்துக்களையும் நண்பர்களும், தோழர்களும் அம்பலப்படுத்த வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.//But u did the job at right time... with right spirit.//நன்றி அசுரன், ஆரிய இந்துமத வெறியர்களுக்கு பெரியார் எப்பொழுதுமே தொண்டையில் சிக்கிய முள்தான், விழுங்கி உட்செரிக்கவும் முடியாது, போகட்டும் என்று புறக்கணிக்கவும் முடியாது, பெரியாரியவாதிகளும் அப்படித்தான், அதனால் பெரியாரியவாதிகளை முட்டாளாக கருதிகொண்டு அவர்களை கைத்தடியாக பயண்படுத்த நினைப்பவர்களை அம்பலப்படுத்தும் நோக்கத்தோடே எனது மறுப்புக்களை தெரிவித்தேன்.நட்புடன்சம்பூகன்
January 31, 2008 8:08 AM
தமிழரங்கம் said...
தமிழ்மணி என்ற பார்பனியமணி, கம்ய+னிசம் மீது காறி உமிழ்ந்த போது அதன் நோக்கம் மக்களின் உரிமை தொடர்பானதல்ல. மாறாக மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற, தமது சமூக விரோத செய்லகளை பாதுகாக்கின்ற வகையில் தான், பூனுலில் தொங்கிக் கொண்டிருந்தனர்.கம்யூனிஸ்ட்டுகள் கோயிலை இடிப்பார்கள், நாஸ்த்தியதுகளுக்கு அங்கு என்ன வேலை என்று, மார்பில் அடித்த ஒப்பாரி வைத்தனர். ஐயா நீங்கள் எதை மற்றவனுக்கு மறுக்கின்றீர்களோ, அதைக் கோரித்தான் அங்கு கம்யூனிஸ்ட்டுகள் போராடுகின்றனர். கம்யூனிஸ்ட்டுகளை விரட்ட வேண்டுமா, நீங்கள் கம்ய+னிஸ்டுகளின் கோரிக்கை முன்வைக்காத படி, சமுகத்தின் கோரிக்கைகளை ஜனநாயக மயமாக்கிவிடுங்கள். இதை செய்ய மறுக்கும் நீங்கள், கம்ய+னிஸ்ட்டுகளின் ஜனநாயக மீறல் பற்றி புலம்புவது அர்த்தமற்றது. அதுவோ பூனூல் வகைப்பட்டது. உங்களால் தான், உங்கள் நடத்தையால் தான், கம்யூனிஸ்ட்டுகள் கோடிக்கால் பூதம் போல் உங்களை கழுவறுக்க உருவாக்கின்றனர். ஏன் பெரியாரிஸ்ட்டுகள், கூடத்தான். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வர முன் அவர்களின் ஜனநாயக மீறலைப்பற்றி பேசும் நீங்கள், அவர்கள் உருவாகாத மாதிரி சமூகத்தின் உரிமைகளை வழங்கிவிடுவதல்லவா நேர்மை. சரியான வழியும் கூட. அதற்காகவா தமிழ்மணி என்ற பார்ப்பனமணி போராடுகின்றது. கம்ய+னிஸ்ட்டுகளுக்கு எதிராக காறி உமிழ்வதை விட, கம்யூனிஸ்டுகள் அரசியலை நடத்த முடியாத வகையில், சகல சமூக அநீதிகளை ஒழித்துக் கட்டலாமே.கோயில்களில் அனைத்து சாதியினரும் சென்று வழிபடும் உரிமை வழங்க மறுப்பது ஏன். அனைத்து சாதியிரும் பூசை செய்யும் உரிமை வழங்க மறுப்பது ஏன். அதை அவர்களின் சொந்த மொழில் வழிபடும் உரிமை மறுப்பது ஏன்? இப்படி பற்பல. இதை நீங்கள் மறுப்பதால், கம்யூனிஸ்டுகள் அதற்கு எதிராகப் போராடுகின்னறனர். இதனால் தான் கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்ட்டுகள், மற்றவர்களும், அவர்கள் நேசிக்கும் மக்களின் அடிப்படை உரிமைக்காக போராடுகின்றன்றனர்.
January 31, 2008 1:04 PM
Sathiyanarayanan said...
அருமையான விவாதம், அருமையான பின்னுட்டங்கள் நன்றி தோழர்களேஅனைவரும் ஒன்றிணைந்து பார்ப்பனர்களை எதிர்த்துக் குரலெழுப்ப தகுந்த நேரம் இதுபணி சிறக்க வாழ்த்துக்கள் தோழர்களேநன்றி
January 31, 2008 8:32 PM
அசுரன் said...
////கம்யூனிஸ்ட்டுகள் கோயிலை இடிப்பார்கள், நாஸ்த்தியதுகளுக்கு அங்கு என்ன வேலை என்று, மார்பில் அடித்த ஒப்பாரி வைத்தனர். ஐயா நீங்கள் எதை மற்றவனுக்கு மறுக்கின்றீர்களோ, அதைக் கோரித்தான் அங்கு கம்யூனிஸ்ட்டுகள் போராடுகின்றனர். கம்யூனிஸ்ட்டுகளை விரட்ட வேண்டுமா, நீங்கள் கம்ய+னிஸ்டுகளின் கோரிக்கை முன்வைக்காத படி, சமுகத்தின் கோரிக்கைகளை ஜனநாயக மயமாக்கிவிடுங்கள். இதை செய்ய மறுக்கும் நீங்கள், கம்ய+னிஸ்ட்டுகளின் ஜனநாயக மீறல் பற்றி புலம்புவது அர்த்தமற்றது. அதுவோ பூனூல் வகைப்பட்டது. உங்களால் தான், உங்கள் நடத்தையால் தான், கம்யூனிஸ்ட்டுகள் கோடிக்கால் பூதம் போல் உங்களை கழுவறுக்க உருவாக்கின்றனர். ஏன் பெரியாரிஸ்ட்டுகள், கூடத்தான். /////சரியான வாரத்தைகள். மக்களின் கோரிக்கைகளை ஜனநாயகமயமாக்கிவிட்டல் அங்கு புரட்சிகர ஜனநாயக சக்திகளுகு என்ன வேலை இருக்கப் போகிறது?அசுரன்
January 31, 2008 11:41 PM
Bhagat said...
Good Job comrade... Your replies seperates Water from the Milk... I presume "Tamilmani" is a half-boiled egg.. screaming about communism and socialism.. I hope your replies will cook him more...
கிழிந்து தொங்கும் தமிழ்மணி (எ) 'பார்ப்பன'மணியின் முகமூடி
கிழிந்து தொங்கும் தமிழ்மணி (எ) 'பார்ப்பன'மணியின் முகமூடி
தமிழ்மணி என்ற பெயரில் ஒளிந்து கொண்டு எழுதிய பார்ப்பன சமஸ்கிருதமனியை அம்பலப்படுத்தி இந்த பதிவு நேற்று வெளியானது, ஜனநாயக முகமூடியை அணிந்து கொண்டு கம்யூனிச எதிர்ப்பு என்கிற போர்வையில், தமிழர்களுக்கு எதிராகவும், இணையத்தில் முற்போக்காளர்களூக்கு இடையில் சிண்டு முடியும் நோக்கோடும் எழுதப்பட்டிருந்த தமிழ்மணியின் பதிவினை எடுத்து போட்டு அதில் ஒளிந்திருக்கும் பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்தியதோடு, பார்ப்பனமணிக்கு சில அடிப்படையான கேள்விகளையும் அந்த பதிவில் எழுப்பியிருந்தேன், கேள்விகளுக்கு பதிலளிக்கமாலும், நாம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்க வக்கில்லாமலும் ஓடிய தமிழ்மணி என்பவர் தான் உண்மையில் பார்ப்பனமணிதான் என்பதை இப்போது நிரூபித்திருப்பதோடு, குட்டு வெளியாகிவிட்டதே என்ற பதட்டத்தில் என்ன செய்வது என்று அறியாது, அசுரன் என்ற பதிவருக்கு பதில் எழுதும் சாக்கில் தனது சமஸ்கிருத ஆதரவு அடையாளத்தை காட்டியபடி அம்மணமாக நிற்கிறார்.இது எந்த அளவுக்கு போயிருக்கிறது என்றால், தமிழ்மணியை நேற்று சமஸ்கிருதமணி என்று சுட்டிக்காட்டி நாம் எழுதிய பொழுது, தமிழ்மணிக்கு ஆதரவாக வந்து வாதாடியவர் பதிவர் சதுக்கபூதம் அவர்கள், இவர் தமிழ்மணி எழுதிய கம்யூனிச எதிர்ப்பு பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து பின்னூட்டம் போட்டுவந்திருக்கிறார் என்பதோடு தமிழ்மணியின் ஜனநாயக விரோத பார்ப்பனீய முகம் அறியாமல், அவரை ஒரு ஜனநாயகவாதி என்றும் நம்பிவந்திருக்கிறார் என்பதனை அங்கிருக்கும் பதிவுகளை படிப்பவர்கள் பார்க்கலாம், தமிழ்மணியின் ஜனநாயக முகத்திரை கிழிந்து இன்று உண்மை முகம் அம்பலமாகியிருக்கும் வேளையில் இப்பொழுது அவர் அங்கே போட்டிருக்கும் பின்னூட்டத்தை பாருங்கள்
சதுக்க பூதம் said...//அதே போல, பண்டைய இந்தியாவின் தொடர்பு மொழியாக இருந்தது சமஸ்கிருதம். இன்றுதொடர்பு மொழியாக இருப்பது ஆங்கிலம். இரண்டின் மீது வெறுப்பு கொண்டிருப்பவர்களும்மக்கள் விரோதிகளே.//நீங்கள் கூறுவது தமிழ் நாட்டு கோவில் பற்றி.சமஸ்கிருதம்எந்த காலத்தில் தமிழ் நாட்டின் ஆட்சி மொழியாக இருந்தது?இந்த பதிவின் மூலம்உங்களுடைய உண்மையான கம்யூனிச எதிர்ப்பின் அடிப்படை காரணம் சந்தேகத்தைஏற்படுத்துகிறதுதமிழ்மணியின் உண்மை அடையாளத்தை உணர்ந்து கொண்ட பதிவர் சதுக்க பூதத்திற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு பார்ப்பனர்களின் இந்த நாலாந்தர உத்தியை அனைத்து பதிவர்களூம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன்.குறிப்பு: நேற்று நாம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமலும், மறுக்காமலும் அடுத்த பதிவை போட்டிருக்கிறார் பார்ப்பனமணி, ஆனால் இப்போதைய பதிவு துலக்கமாகவே அவரை அம்பலப்படுத்தியிருக்கிறது, தற்சமயம் நான் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அதை பற்றி எழுத முடியாத நிலையில் இருக்கிறேன், ஆனால் நிச்சயம் நாளை எழுதுகிறேன், நாம் இப்படியெல்லாம் எழுதுகின்ற நிலையில், இனி முதலுக்கே மோசமாகிவிடும் என்பதை உணர்ந்து எதையாவது சொல்லி வைப்போம் என்கிற நோக்கில் பார்ப்பனமணி நமக்கு பதிலளிப்பார் என்று நினைக்கிறேன், பதிவர் சதுக்கபூதத்தை தாஜா செய்யும் வேலையிலும் இறங்கக்கூடும். அல்லது நேற்றே நான் கூறியபடி எனக்கு கம்யூனிச லேபிள் ஒட்டி தனது வழக்கமான சங்கதிகளை அவிழ்த்துவிடுவார் என்று நினைக்கிறேன், பார்க்கலாம்.
Posted by சம்பூகன் at 2:10 AM
10 comments:
சம்பூகன் said...
test
January 30, 2008 3:53 AM
Anonymous said...
ozinthaan thurooki
January 30, 2008 4:26 AM
கோவி.கண்ணன் said...
//தமிழ்மணியின் உண்மை அடையாளத்தை உணர்ந்து கொண்ட பதிவர் சதுக்க பூதத்திற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு பார்ப்பனர்களின் இந்த நாலாந்தர உத்தியை அனைத்து பதிவர்களூம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன்.//படித்தவுடனே புரிந்தது.
January 30, 2008 7:30 AM
Anonymous said...
I had wasted time by reading this page.
January 30, 2008 8:03 AM
Anonymous said...
waste of time
January 30, 2008 8:04 AM
சதுக்க பூதம் said...
There seems to be some truth in ur view.Hindu-Hindi(sanskrit)-India facism is more dangerous than dictatorship.
January 30, 2008 8:17 AM
தமிழ்மணி said...
நண்பர் சம்புகன்,உங்கள் பதிவுகளை இப்போதுதான் பார்த்தேன். அதனால், பதிவுக்கு பதில் எழுதாததற்கு மன்னிக்கவும்.ஆனால், உங்களது இந்த கேள்விகளுக்கான பதில்களையும் ஏற்கெனவே பலர் கேட்டிருக்கின்றனர். அதற்கான பதிலையும் மறுமொழியாக என் பதிவிலேயே எழுதியிருக்கிறேன்.நன்றி
January 30, 2008 8:19 AM
பவ்வனின் எதிரி said...
சரியா சொன்னீங்க சம்பூகன் சார்,எல்லாத்தயும் சொன்ன தமிழ்மணி என்ற விட்டுது சிகப்பு குரூப், கவனமா பவ்வன்கள் பேசும் 'அம்பாகாய்ரா' மொழிய வுட்டுட்டானுங்க பாத்தீங்களா?
January 30, 2008 10:36 AM
ஆளவந்தான் said...
மகா கனம் பொருந்திய அன்புள்ள சம்பூகன் அய்யா சமூகத்திற்கு,நலம், நலமறிய அவா. அடியேன் ஆளவந்தான் எழுதிக் கொள்வது.தமிழ்மணி என்ற பெயரில் கம்யூனிஸ்ட்டுகளை படு ஆபாசமாக சித்தரித்து எழுதுவது செல்வன் என்ற கோயம்புத்தூரைச் சேர்ந்த தேவர் ஜாதிப் பையன். தற்போது அமெரிக்காவில் படித்துக் கொண்டே பார்ட் டைமாக வேலை செய்கிறான். இவனுக்கு மனைவியும் ஒரு மகளும் இருப்பதாக பேச்சு.மஞ்சூர் ராசா என்ற பார்ப்பன அடிவருடியின் முத்தமிழ் குழுமத்திலும் பண்புடன் என்ற ஆசிப் குழுமத்திலும் பாப்பானையும் சமஸ்கிருதத்தையும் வாழ்த்தி பதிவுகள் இடுகின்றான். அப்படியே கம்யூனிஸ்ட்களை திட்டுவது, பெரியார் பாசறை, கருணாநிதி, வீரமணியை திட்டுவது, தமிழை தாழ்த்தி வடமொழியை ஆதரிப்பது போன்று பல வேலைகளை செய்து வருகின்றான். அது மட்டுமல்ல இந்தியாவை பழித்து அமெரிக்காவை புகழ்ந்தும் பல பதிவுகள் எழுதி வருகின்றான்.இவனுக்கு கே.ஆர்.அதியமான் போன்ற பார்ப்பன டோண்டுவின் கைத்தடிகள் உதவி செய்கின்றனர்.தற்போதுள்ள தமிழ்மணி ஒரு குழுப்பதிவு. எழில் என்ற பதிவில் பிதற்றி வரும் கால்கரி சிவா, இலவச கொத்தனார், செல்வன், ராமநாதன், திருமலைராஜன் போன்ற நாய்கள் இந்த பதிவை நடத்தி வருகின்றன. இந்த குழு ஏற்கெனவே நம் தோழர் விடாது கருப்பினை எதிர்த்து விட்டுது சிகப்பு என எழுதி செருப்படி பட்டது உமக்கு தெரியாமல் இருக்கலாம்.விட்டுது சிகப்பினை மூடிய பிறகு இந்த பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடிக் கும்பல் தமிழ்மணியாக அவதாரம் எடுத்து தமிழ் வலைப்பதிவில் மலம் அள்ளி தெளித்து வருகின்றது.தோழர் அசுரன், நீங்கள், தியாகு மற்ற நம் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இந்த இழிபிறவிகளை செருப்பால் அடித்து துரத்துவோம். ஒற்றுமையாக கைகோர்த்து காரியம் முடிக்க வேண்டிய தருணம் இது!
January 30, 2008 5:33 PM
Sathiyanarayanan said...
சம்பூகன் அவர்களே, தமிழ்மணியின் தோலுரித்தமைக்கு நன்றிஆளவந்தான் அவர்களையும் பாராட்டுகிறேன்//தமிழ்மணியின் உண்மை அடையாளத்தை உணர்ந்து கொண்ட பதிவர் சதுக்க பூதத்திற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு பார்ப்பனர்களின் இந்த நாலாந்தர உத்தியை அனைத்து பதிவர்களூம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன்.// வழிமொழிகிறேன்
Subscribe to:
Posts (Atom)