Friday, January 23, 2009

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு க்கு நிரந்தரத் தொடுப்பு" முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு.
சனவரி 25, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநாடு,கலைநிகழ்ச்சிகளில் ஏன் பங்கேற்க வேண்டும்?
உலகமயமாக்கலினால் தொழிலாளர்கள் சந்தித்த இழப்புகள் ஏராளம்,ஐடி,பி.பீ.ஒ,ஏனைய தொழிற்சாலைகளில் மக்கள் கொத்து கொத்தாக பிடுங்கி எறியப்படுகின்றார்கள்.முதலாளி தன் தேவைக்காக நம்மை எப்படியெல்லாம் பயன் படுத்தினான் தற்போதோ நம் உழைப்பு தேவை இல்லை என்பதால் தூக்கிஎறிந்து விட்டான்.பல்லாயிரக்கணக்கான ஐடி பி.பீ.ஒ ஊழியர்கள் இது வரை நீக்கப்பட்டுள்ளனர். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.குரங்குகளை போல மரம் விட்டு மரம் அதாவது கம்பெனி விட்டு கம்பெனி தாவுகிறோம்.நூற்று கணக்கில் ஆயிரக்கணக்கில் வேலை செய்து என்ன பயன் நமக்காக நமது உரிமைக்காக சங்கத்தை கட்டினோமா என்றால் அது இல்லை.முதலாளிகள் நம்மை வைத்து சம்பாதித்த போது நமது உரிமைகளை அவன் காலடியில் வைத்து விட்டு அவனின் எலும்பு துண்டுக்கு ஏங்கினோம் என்பது தான் உண்மை.ஏன் இங்கு ஓடி ,பிரச்சினை இல்லையா? நாயைப் போல் கேவலமாக நடத்த்ப்படுவது இல்லையா?பாலியல் ரீதியில் பெண்கள் பாதிக்கப்படுவது தான் இல்லையா? இத்தனை பிரச்சினைகளையும் இவ்வளவு நாள் ஒதுக்கி வைத்து விட்டோம். இனி எப்படி போராடுவது எப்படி போராடுவது என கற்போம்.வேறு எங்கு வேலைக்கு போனாலும் இக்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்,இன்னும் ஆறு மாதத்தில் 50000பேர் ஐடி,பிபீஓ வில் மட்டும் பணிநீக்கம் செய்யப்படப்போகின்றனர், இப்படிப்பட்ட நிலைக்கு தான் நம்மை இக்கம்பெனிகள் தள்ளிவிட்டன,நம் திறமைகள் முதலாளியின் தேவைக்காக குழிதோண்டி தோண்டி புதைக்கப்பட்டன .இப்போது அவனின் தேவைக்காக வெளியேற்றப்பட்டிருக்கின்றோம். தொழிலாளர்களை முடியாக நினைத்து வதைத்த ஜேப்பியாரின் கொட்டத்தை ஒரு சங்கம் கட்டியதாலேயே அடக்க முடிந்தது.அங்கு வெற்றியை வரலாறாக்கிகாட்டிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இம் மாநாட்டில் திரளாய் பங்கேற்போம்..நம்முடைய பிரச்சினக்காக இனியும் போராடாது இருந்தால் வருங்காலம் தற்கொலை பாதைக்கு ஒப்பானதே.தொழிலாளியாக நாம் இருக்கும் வரை தற்கொலை நமக்கானதல்ல சங்கமாய் ஒன்றிணைவோம் பாட்டாளியாய் போராடுவோம்.தொழிற்சங்க வாதத்தில் மூழ்கி இருக்கும் போலிகளை விரட்டியடிப்போம்.

1 comment:

Anonymous said...

தோழருக்கு,

நவம்பர் புரட்சி தினத்திற்கு புரட்சிகர வாழ்த்துகள்.

http://vrinternationalists.wordpress.com